அவன் என் காலுக்கு கீழே இருக்கணும்.. கோபத்தில் சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்று கார்த்திக் சிலம்பாட்டத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கார்த்திக்கிற்கு சாமுண்டேஸ்வரி செயினை தூக்கி வீச, கார்த்திக் சிலம்பம் குச்சியில் செயினை வாங்கி அதை அப்படியே தூக்கி வீச, அது ரேவதி கழுத்தில் விழுகிறது. நான் இந்த போட்டியில் பரிசுக்காக கலந்துக்கல, நீங்க யாரும் ஆம்பளையே இல்லையானு கேட்டதால் தான் கலந்துக்கிட்டேன். எனக்கு இந்த பரிசு வேண்டாம் என்று சொல்கிறார் கார்த்திக்.

அந்த செயின் மகள் கழுத்தில் விழுந்ததால் சாமுண்டீஸ்வரி ஆத்திரம் அடைகிறாள். இதைப்பார்த்த ஊர் மக்கள் யார் டா இவன், சாமுண்டீஸ்வரிக்கிட்ட பேசவே யாரும் பயப்படுவாங்க இவன், செயினையே தூக்கி போட்டுவிட்டானே என்று பெருமையாக பேசுகின்றனர். இதை கவனித்த கார்த்திக் மீசையை முறுக்கி விட்டபடி கிளம்பி வருகிறான். இதையடுத்து, இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியின் முதல் ஸ்வேதா மகள் காட்டப்படுகிறாள். அவளை மயில் வாகனம் என்பவர் பின் தொடர்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் அவன், கையைப் பிடித்து இழுக்க அதை பார்த்து எல்லோரும் மயில் வாகனத்தை அடிக்க சாமுண்டீஸ்வரியின் மகள் அது என் கணவர் தான் என தடுத்து நிறுத்துகிறார். இதை தொடர்ந்து சாமுண்டீஸ்வரியின் கடைசி மகள் ஸ்வேதா திருவிழாவில் பாட்டு பாட இந்த குரலை கேட்ட ராஜராஜன் ஸ்வேதா பாடினால் சாமுண்டீஸ்வரிக்கு பிடிக்காது என்பதால் தடுத்து நிறுத்த ஓடி வருகிறான். ஆனால், சாமுண்டீஸ்வரி மகள் தான் பாடுவது யார் என்று தெரியாமலை குரலை கேட்டு சந்தோஷப்படுகிறான்.

கார்த்திக் என் காலுக்கு கீழே இருக்கனும்: இதையடுத்து வீட்டுக்கு வரும் சாமுண்டீஸ்வரி,கடுமையான கோபத்துடன் கணவரிடம் யார், அவன் பெயர் என்ன என்று கேட்க, எனக்கு யாருனு தெரியல விசாரிக்கிறேன் என்றான் ராஜராஜன். அப்போது, ரேவதி, அவனின் ஊர் என்ன வென்று தெரியல, ஆனால், ரொம்ப திமிரு பிடிச்சவனாக இருக்கிறான் என்கிறாள். உடனே சாமுண்டீஸ்வரி என் கிட்டையே திமிராக நடந்து கொண்ட கார்த்திக் ஒன்னு என் எதிரியாக இருக்கணும் இல்லை என் வீட்டுல அடிமையாக எனக்கு கீழே வேலை செய்யணும். அத இந்த ஊரே பார்த்து இந்த சாமுண்டீஸ்வரியை எதிர்த்தா இதுதான் நிலைமை என்று தெரிஞ்சிப்பாங்க என்று ஆத்திரத்தில் கத்துகிறாள்.

சரியாக சொன்ன கார்த்திக்: இதையடுத்து.கார்த்திக் வீட்டில்,ஆனந்த் மற்றும் அருணிடம் இந்நேரம் சாமுண்டீஸ்வரி அத்தை, யார் இவன் என்று யோசிக்கிட்டு இருப்பாங்க. இன்னும் கொஞ்சம் நேரத்தில் நம்மை தேடி வருவார்கள் என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே, சாமுண்டீஸ்வரியின் பிஏ சந்திரகலா, அங்கு இருப்பவர்களிடம் திருவிழாவில் சிலம்பாட்டம் செய்தவன் யார் என்று விசாரித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதைப்பார்த்த கார்த்திக், பாத்தியா நான் சொன்னது சரியாக போச்சா, அவங்க என்னைத்தான் தேடிக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல, அருணும், ஆனந்தம் எப்படி கார்த்திக் சரியாக சொன்ன என்று கேட்கின்றனர்.

என்னால முடியாது: தாத்தா அத்தையை பற்றி எல்லாத் தகவலையும் எனக்கு சொல்லி தான் அனுப்பினார். நானே எப்படி வீட்டுக்குள் போவது என்று யோசிக்கிட்டுத்தான் இருந்தேன், பாத்தியா தானா வாய்ப்பு வருது, இருந்தாலும் கொஞ்சம் பில்டப் கொடுப்போம் என்று சொல்கிறான். அப்போது பிஏ சந்திரலேகா, கார்த்திக்கிடம் வந்து வேலைக்கு அழைக்க. எனக்கு வேற வேலை இருக்கு.. திமிர் புடிச்ச சாமுண்டீஸ்வரி கிட்ட வேலை பார்க்க முடியாது என பதிலடி கொடுக்கிறான். அதன் பிறகு சந்திரகலா சாமுண்டீஸ்வரி எதிரியான சிவனாண்டியை சந்திக்கிறாள்.

இறுதியில் சிவனாண்டி மனைவி தான் சந்திரகலா.. சாமுண்டீஸ்வரியை வேவு பார்ப்பதற்காக அவளுடன் இருக்கிறாள் என்பது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X