கார்த்திக்கிடம் உதவி கேட்ட சிவனாண்டி.. கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்று கார்த்திக், சிலம்பம் போட்டியில் கார்த்திக் வெற்றி பெற்றதால், கார்த்தியை அடிமையாக்கி இழந்த மானத்தை திரும்ப பெற வேண்டும் என்று திட்டம் போட்ட சாமூண்டீஸ்வரி, அவனைவீட்டு வேலையில் சேர்க்க வேண்டும் என்று சொல்ல அனைவரும், கார்த்திக்கை தேடி அலைகின்றனர்.
அப்போது, கார்த்திக் வீட்டில்,ஆனந்த் மற்றும் அருணிடம் இந்நேரம் சாமுண்டீஸ்வரி அத்தை, யார் இவன் என்று யோசிக்கிட்டு இருப்பாங்க. இன்னும் கொஞ்சம் நேரத்தில் நம்மை தேடி வருவார்கள் என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே, சமுண்டீஸ்வரியின் பிஏ சந்திரகலா வீட்டு வேலைக்கு கூப்பிட, எனக்கு வேற வேலை இருக்கு.. திமிர் புடிச்ச சாமுண்டீஸ்வரி கிட்ட வேலை பார்க்க முடியாது என பதிலடி கொடுக்கிறான். அதன் பிறகு சந்திரகலா சாமுண்டீஸ்வரி எதிரியான சிவனாண்டியை சந்திக்கிறாள்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக் வேலைக்கு வரமுடியாது என்று சொல்லி அனுப்பி விடுகிறான். இதையடுத்து, சாமுண்டீஸ்வரியின் பிஏ, சந்திரகலா சாமுண்டீஸ்வரி எதிரியான சிவனாண்டியை சந்திக்கிறாள். இறுதியில் சிவனாண்டி மனைவி தான் சந்திரகலா.. சாமுண்டீஸ்வரியை வேவு பார்ப்பதற்காக அவளுடன் இருக்கிறாள் என்பது தெரிகிறது.
சிவனாண்டியின் மாஸ்டர் பிளான்: சிவனாண்டியை சந்தித்த சத்திரலேகா, அவரின் காலில் விழுந்து இந்த ஊரில் அவள் வைத்தது தான் சட்டமாக இருக்கு, நீங்க எப்போதும் இரண்டாவது இடத்தில் தான் இருக்கீங்க, அதை நினைச்சு எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு. நாம முதல் இடத்தை பிடிக்க நல்ல சந்தர்ப்பம் வந்து இருக்கு, இந்த ஊரில் கார்த்திக்னு ஒருத்தன் வந்து இருக்கான் அவன், சாமுண்டீஸ்வரியை அவமானப்படுத்திவிட்டான். இதனால், அவள், அவனை தன்னோட வீட்டில் அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். நீங்க போய் அவன் கிட்ட பேசுங்க என்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











