சாமுண்டீஸ்வரியை காப்பாற்றிய கார்த்திக் ..கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: கார்த்திகை தீபம் சனிக்கிழமை எபிசோடில், சாமுண்டீஸ்வரியை எதிர்த்ததால் கார்த்திக்கை அடிமையாக வீட்டு வேலைக்கு வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறாள். இதனால், பிஏ சந்திரலேகா, கார்த்திக்கை சந்தித்து வேலைக்கு அழைக்க அவன் வரமுடியாது என்று சொல்லி அனுப்பி விடுகிறான்.
இதையடுத்து, சாமுண்டீஸ்வரியின் பிஏ, சந்திரகலா சாமுண்டீஸ்வரி எதிரியான சிவனாண்டியை சந்திக்கிறாள். சிவனாண்டியை சந்தித்த சத்திரலேகா, அவரின் காலில் விழுந்து இந்த ஊரில் அவள் வைத்தது தான் சட்டமாக இருக்கு, நீங்க எப்போதும் இரண்டாவது இடத்தில் தான் இருக்கீங்க, அதை நினைச்சு எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு. நாம முதல் இடத்தை பிடிக்க நல்ல சந்தர்ப்பம் வந்து இருக்கு என்று சொல்லி கார்த்திக் பற்றி சொல்லுகிறாள் இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் இந்த ஊரில் கார்த்திக்னு ஒருத்தன் வந்து இருக்கான் அவன், சாமுண்டீவரியை சிலம்ப சண்டையில் அவமானப்படுத்திவிட்டான். இதனால் சாமுண்டீஸ்வரி, அவனை தன்னோட வீட்டில் அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். நீங்க போய் அவன் கிட்ட பேசி அவனை நம்ப திட்டத்தை சொல்லி அவனை நம்ப ஆளா ஆக்கிடுங்க சொல்லுகிறாள்.
கடுமையான சண்டை: இதையடுத்து, சிவணான்டி ஆட்கள் சாமுண்டீஸ்வரி கொலை செய்ய திட்டம் போடுகின்றனர். இதற்காக வெளியூரில் இருந்து அடி ஆட்களை வரவழைத்து நேரம் பார்த்து அவளை குத்த ஏற்பாடு செய்கின்றனர். அப்போது ரௌடிகள் குத்த வர சாமுண்டீஸ்வரி துப்பாக்கியை கையில் எடுக்க இருவருக்கும் இடையே கடுமையான சண்டை நடக்கிறது. அப்போது ரௌடிகள் சாமுண்டீஸ்வரியின் துப்பாக்கியை தள்ளிவிட்டு அவளை குத்த வருகின்றனர்.
இந்த சமயத்தில் கார்த்திக் இடையில் புகுந்து சாமுண்டீஸ்வரியை காப்பாற்றுகிறான். ரவுடிகளுக்கும் கார்த்திக்கும் இடையே பெரிய சண்டை நடக்கிறது. அதைத்தொடர்ந்து சிவனாண்டி கார்த்தியை சந்தித்து, நீ பெரிய புத்திசாலியாக இருக்க, இதுபோன்ற ஆள் என்கூட இருந்தா, இந்தநேரம் நான் சாமுண்டீஸ்வரி இடத்தில் இருந்து இப்பேன், என்று சொல்லி தன்னுடன் சேர்ந்து வேலை செய்யுமாறு சொல்ல கார்த்தி முடியாது என மறுக்கிறான்.
சாமுண்டீஸ்வரிக்கு என்ன ஆகும்: பிறகு சந்திரகலா மற்றும் சிவனாண்டி திட்டம் ஒன்றை போடுகின்றனர். திடீரென சாமுண்டீஸ்வரி வீட்டில் கரண்ட் கட் ஆகி விடுகிறது. வீட்டுக்குள் ரவுடிகளை இறக்கி சாமுண்டிஸ்வரியை குத்த சொல்கிறான் சிவனாண்டி. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்


Click it and Unblock the Notifications











