சாமுண்டீஸ்வரி வீட்டுக்குள் நுழைந்த கார்த்தி.. கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: சாமுண்டீஸ்வரியை கொலை செய்ய திட்டம் போடுகின்றனர். இதற்காக வெளியூரில் இருந்து அடி ஆட்களை வரவழைத்து நேரம் பார்த்து அவளை குத்த ஏற்பாடு செய்கின்றனர். அப்போது ரௌடிகள் குத்த வர சாமுண்டீஸ்வரி துப்பாக்கியை கையில் எடுக்க இருவருக்கும் இடையே கடுமையான சண்டை நடக்கிறது.

அப்போது ரௌடிகள் சாமுண்டீஸ்வரியின் துப்பாக்கியை தள்ளிவிட்டு அவளை குத்த வருகின்றனர். இந்த சமயத்தில் கார்த்திக் இடையில் புகுந்து சாமுண்டீஸ்வரியை காப்பாற்றுகிறான். ரவுடிகளுக்கும் கார்த்திக்கும் இடையே பெரிய சண்டை நடக்கிறது. இதையடுத்து, சாமுண்டீஸ்வரி, நான் யாருக்கும் இரண்டாவது வாய்ப்பு கொடுத்தது இல்லை, ஆனால்,என் குடும்பத்தோட உயிரை காப்பாற்றியதால் உனக்கு ஒரு வாய்ப்பு தரேன் நீ என் வீட்டுக்கு வேலைக்கு வா என்கிறாள். அப்போது கார்த்திக் யோசித்துசொல்றேன் என்று சொல்லிவிட்டு போக இன்று நடைபெறுவதை பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி வீட்டில் கரண்ட் கட் ஆகிறது. அப்போது ரேவதி, அம்மா, நம்ம வீட்டுல யாரோ இருக்காங்க பயமா இருக்கு என்று பயப்படுகிறாள். அப்போது சாமுண்டீஸ்வரி, எல்லா கதவையும் சாத்துனீங்களா என்று கேட்டு விட்டு கையில் துப்பாக்கியுடன் வந்து நிற்க, அப்போது கார்த்திக் மாஸாக என்ட்ரி கொடுக்கிறான். கார்த்திக் வந்து நிற்க ரேவதி நீ எதுக்கு வந்த என்று கேள்வி கேட்கிறாள். வேலைக்கு சேர சம்மதம் சொல்ல தான் வந்தேன் என சொல்லும் கார்த்திக் எதுக்கு போலி துப்பாக்கி வச்சுட்டு நின்னுட்டு இருக்கீங்க என்ன அத்தையை கலாய்க்கிறான்.

விசாரிக்கிறான்: அதை தொடர்ந்து சாமுண்டீஸ்வரி உன்னை அப்படி எல்லாம் வேலைக்கு எடுக்க முடியாது சில கேள்விகள் கேட்கணும் என சொல்ல கார்த்திக் நான்தான் உங்க எல்லாரையும் இன்டர்வியூ பண்ணி வேலைக்கு சேருவேன் என செக் மேட் வைக்கிறான். அதன் பிறகு ஒவ்வொருத்தராக கூப்பிட்டு கார்த்திக் கேள்விகளை கேட்க கடைசியாக கார்த்திக் ஸ்வேதா மூலமாக இந்த வீட்டுக்குள் வருகிறான் என்பது என்று தெரிகிறது. இறுதி‌யாக கார்த்திக் சந்திரகலாவை விசாரிக்க கூப்பிடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X