வேலைக்கு சேரும் கார்த்திக்.. சாமுண்டீஸ்வரி செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: சாமுண்டீஸ்வரி துப்பாக்கியை கையில் எடுக்க இருவருக்கும் இடையே கடுமையான சண்டை நடக்கிறது. இதையடுத்து, சாமுண்டீஸ்வரி கார்த்திக்கை வீட்டில் அடி ஆளாக வேலைக்கு வர சொல்ல, கார்த்திக் வேலைக்கு வர மறுக்கிறான். சிவனாண்டி கார்த்திக்கை சந்தித்து, நீ பெரிய புத்திசாலியாக இருக்க, இதுபோன்ற ஆள் என்கூட இருந்தா, இந்தநேரம் நான் சாமுண்டீஸ்வரி இடத்தில் இருந்து இருப்பேன், என்று சொல்லி தன்னுடன் சேர்ந்து வேலை செய்யுமாறு சொல்ல கார்த்திக் முடியாது என மறுக்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்ககலாம்

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக் சாமுண்டீஸ்வரி வீட்டில் வேலைக்கு சேர்கிறான். ஆனால், சாமுண்டீஸ்வரி கார்த்திக்கை தனக்கு கீழே மரியாதை குறைவாக நடக்க திட்டமிடுகிறாள். கார்த்திக்கிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவனை வீட்டுக்குள் அழைக்கிறாள். அங்கே சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலா என இருவர் மட்டும் அமர்ந்திருக்க கார்த்திக்கிற்கு உட்கார சேர் கூட இல்லாமல் இருக்கிறது.

zee tamil karthigai deepam

இந்த சமயத்தில் ஒரு பெண்மணி டீ கொண்டு வந்து கொடுக்க கார்த்திக் அதை தட்டி விட, டீ சந்திரகலா மீது கொட்டி விட்டு மன்னிப்பு கேட்கிறான். சந்திரகலா தனது துணியை அலம்பி கொண்டு வருவதற்காக உள்ளே செல்ல கார்த்திக் அந்தச் சேரில் உட்கார்ந்து சாமுண்டீஸ்வரியை ஷாக்காக்குகிறான்.

சாமுண்டீஸ்வரியின் பிளான்: இதைத்தொடர்ந்து அபிராமி கார்த்திக்கிற்கு போன் செய்து எல்லாம் நல்லபடியா நடக்குதா என விசாரிக்க கார்த்திக்கும் எல்லாம் சரியா போய்ட்டு இருக்கு என சொல்லி போனை வைக்கிறான். அதன் பிறகு சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் வெளியே கிளம்ப கார்த்திக் தான் கார் ஓட்ட வேண்டும் என சொல்கின்றனர். கார் ஓட்டுவது மட்டுமின்றி சாமுண்டீஸ்வரி வெளியே இறங்கும்போது கதவைத் திறந்து விட வேண்டும் உள்ளே ஏறும் போது கதவை திறந்து விட வேண்டும் இந்த விதிமுறைகள் எல்லாம் பின்பற்ற வேண்டும் என கண்டிஷன் போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X