சாமுண்டீஸ்வரி கண்ணில் மண்ணை தூவி தப்பிய கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில்!
சென்னை: நேற்றைய எபிசோடில், கார்த்திக் சாமுண்டீஸ்வரி வீட்டில் வேலைக்கு சேர்கிறான். ஆனால், சாமுண்டீஸ்வரி கார்த்திக்கை தனக்கு கீழே மரியாதை குறைவாக நடத்த திட்டமிடுகிறாள். கார்த்திக்கிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவனை வீட்டுக்குள் அழைத்து, உட்காரக்கூட சேர் இல்லாமல் வைத்து அவமானப்படுத்த பிளான் போடுகிறாள்.
இதை தெரிந்து கொண்ட கார்த்திக், அந்த நேரம் டீயை தட்டிவிட அது, சந்திரகலா மீது கொட்டுகிறது. இதனால், சந்திரகலா துணியை மாற்ற உள்ள செல்கிறாள். இதையடுத்து, கார்த்திக் அந்த சேரில், கால் மீது கால் போட்டு உட்கார்ந்து சாமுண்டீஸ்வரியின் மூக்கை உடைக்கிறான் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய சீரியலில், சாமுண்டீஸ்வரி பூஜை செஞ்சுகிட்டு இருக்காங்க அந்த நேரத்துக்கு அருணும், ஆனந்தம் அங்கே வந்து இருக்காங்க, இதைப் பார்த்த கார்த்திக் ஷாக் ஆகுறாரு, டேய் நீங்க ஏன்டா இங்க வந்தீங்க என்று கேட்கிறான். அப்போது, ஆனந்த் ஒரு ஜூம் மீட்டிங் இருக்கு அந்த மீட்டிங்கை நீ அட்டென்ட் பண்ணனும் அதுக்காக தான் நாங்க எங்க வந்தோம் என்று சொல்ல, டேய் நீங்க இங்க வந்ததை பார்த்தா சாமுண்டீஸ்வரி என்ன கண்ணாலேயே எரிச்சிடுவாங்க டா ஏற்கனவே அவங்களுக்கு என் மேல சந்தேகம் இருக்கு, நீங்க ஏன்டா இங்க வந்தீங்க அப்படின்னு கேக்குறாங்க.
ஜூம் மீட்டிங்கில்: அப்போது கார்த்திக் வேற வழியே இல்ல அந்த மீட்டிங் நீ கண்டிப்பா அட்டென்ட் பண்ணனும் அதுக்காக தான் நான் வந்தோம் என்று பேசிக்கொண்டு இருப்பதை தூரத்தில் இருந்து பார்த்த சாமுண்டீஸ்வரி யார் என்று கேட்க, மேடம் இவங்க ஏதோ வழி கேட்டு வந்துருக்காங்க இதோ நான் சொல்லிட்டு வந்துடறேன் என்கிறான். பார்த்தியாடா அந்த அம்மாக்கு என் மேல சந்தேகம் வந்துருச்சு ஆல்ரெடி அந்த அம்மாக்கு என் மேல சந்தேகம் தான் இருக்கு தயவு செய்து நீங்க கோவில்ல வெயிட் பண்ணுங்க நான் வருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டு, சாமுண்டீஸ்வரி அசந்த நேரமாக பார்த்து வேறு ஒரு காரில் கோவிலுக்கு சென்று மீட்டிங்கில் கலந்து கொள்கிறான்.
கார்த்திக் மீட்டிங்கில் இருக்க, இங்கே சாமுண்டீஸ்வரி பூஜையை முடித்துவிட்டு, காருக்கு வர காரில் கார்த்திக் இல்லாததால் ஆத்திரம் அடைந்து நடந்து வந்து கொண்டு இருக்கிறாள். அதே நேரத்தில், கார்த்திக் மீட்டிங்கில் இருப்பதை இருவரும் பார்த்துவிடுவார்களே என்ற பில்டப் எகுறுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











