சாமுண்டீஸ்வரியை ஏமாற்றும் கார்த்திக்... கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: சனிக்கிழமை எபிசோடில், சாமுண்டீஸ்வரி பூஜை செய்து கொண்ட இருக்க, அந்த நேரத்துக்கு ஆனந்தம் அங்கே வந்து மீட்டிங் இருக்கு அந்த மீட்டிங்கை நீ அட்டென்ட் பண்ணனும் அதுக்காக தான் நாங்க இங்க வந்தோம் என்று சொல்ல, டேய் நீங்க இங்க வந்ததை பார்த்தா சாமுண்டீஸ்வரி என்ன கண்ணாலேயே எரிச்சிடுவாங்க டா என்கிறார்.

வேற வழியே இல்லாததால், சாமுண்டீஸ்வரி அசந்த நேரமாக பார்த்து வேறு ஒரு காரில் கோவில் மீட்டிங்கில் கலந்து கொள்கிறான். கார்த்திக் மீட்டிங்கில் இருக்க, இங்கே சாமுண்டீஸ்வரி பூஜையை முடித்துவிட்டு, காருக்கு வர காரில் கார்த்திக் இல்லாததால் ஆத்திரம் அடைந்து நடந்து வந்து கொண்டு இருக்கிறாள். அதே நேரத்தில், கார்த்திக் மீட்டிங்கில் இருக்க, இருவரும் பார்த்துவிடுவார்களோ என்ற பில்டப் எகுறுகிறது. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடு, அதாவது கார்த்திக் ஒரு வழியாக சாமுண்டீஸ்வரி இடமிருந்து தப்பித்த நிலையில் அபிராமியிடம் இருந்து கார்த்திக்கிற்கு போன் வருகிறது. நான் கோவில் பக்கத்துல தான் இருக்கேன் கார்த்திக். எனக்கு என்னுடைய மருமகள்களை பார்க்க வேண்டும் என்று ஆசையா இருக்கு. நீ அவங்கள கோவிலுக்கு கூட்டிக்கொண்டு வா என்று சொல்கிறாள். உடனே, கார்த்திக், அம்மா அவசரப்படாதீங்க அதுக்கு என்று நேரம் வரும்,அப்போது பார்க்கலாம் என்று சொல்ல அபிராமி, அதெல்லாம் முடியாது நான் இப்போ அவர்களை பார்த்தே ஆக வேண்டும். நீ கூட்டிட்டு வா இல்லனா, நான் கிளம்பி அங்க வந்துருவேன் என்று சொல்லி ஃபோனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு, தன்னுடன் வந்து கார்த்திக்கின் நண்பன் இளையராஜாவின் ஃபோனையும் ஸ்விட்ச் ஆப் செய்து விடுகிறாள்.

அடம்பிடிக்கும் அபிராமி: இதனால் கார்த்திக் சாமுண்டீஸ்வரியின் மூன்று மகள்களையும் கோவிலுக்கு கூட்டிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். இந்த சமயத்தில் ஸ்வேதாவிடம் வா கோவிலுக்கு போயிட்டு வரலாம் என்று சொல்ல அவன் இப்போ அம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க என்று சொல்கிறாள். பிறகு உங்க அக்காக்களிடம் போய் நான் சொல்ற மாதிரி சொல்லு, நான் கார்த்திக்கை நீ கோவிலுக்கு கூப்பிட்டா வர மாட்டுறேனு சொல்லு என்கிறான் கார்த்திக் சொன்னது போல ஸ்வேதாவும் அப்படியே சொல்ல மற்ற இரண்டு பேரும் கோவப்படுகின்றனர்.

கார்த்திக்கின் பிளான்: உடனே கார்த்திக்கிடம் வந்து, அவ கோவிலுக்கு கூப்பிட்டா போக மாட்டியா என்று சத்தம் போடுகின்றனர். ஒருத்தருக்காக எல்லாம் பெட்ரோல் செலவு பண்ணிக்கிட்டு கோவிலுக்கு போக முடியாது, நீங்க மூணு பேரும் வருவதாக இருந்தா வாங்க கூட்டிட்டு போறேன் என்று சொல்கிறான். இதைத்தொடர்ந்து மூன்று பேரும் கோவிலுக்கு கிளம்ப இங்கே அபிராமி மற்றும் இளையராஜா ஆகியோர் தங்களது கெட்டப்பை மாற்றிக்கொண்டு எளிமையானவர்கள் போல இருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவராதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X