கார்த்திக்கிற்காக பிச்சைக்காரியாக மாறிய அபிராமி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில்!
சென்னை: நேற்றைய எபிசோடு,அபிராமியிடம் நான் கோவில் பக்கத்துல தான் இருக்கேன், என்னுடைய மருமகள்களை பார்க்க வேண்டும் என்று ஆசையா இருக்கு. நீ அவங்கள கோவிலுக்கு கூட்டிக்கொண்டு வா என்று சொல்கிறாள். உடனே, கார்த்திக், அம்மா அவசரப்படாதீங்க அதுக்கு இன்னும், நேரம் இருக்கு என்று சொல்ல, அபிராமி, அதெல்லாம் முடியாது நான் இப்போ அவர்களை பார்த்தே ஆக வேண்டும். நீ கூட்டிட்டு வா இல்லனா, நான் கிளம்பி அங்க வந்துருவேன் என்று சொல்லி ஃபோனை ஸ்விட்ச் ஆப் செய்து விடுகிறாள்.
இதையடுத்து, கார்த்திக் சாமுண்டேஸ்வரியின் மகள்களுடன் கோவிலுக்கு வர அபிராமி ஏழ்மையான கெட்டப்பில் ஓரமாக நின்று இதை பார்க்கிறாள். அம்மாவை பார்த்து ஷாக்கான கார்த்திக், தனியாக வந்து அம்மாவிடம் என்னமா இது கோலம் என்று கேட்க, அபிராமி நீ தானே அவங்களுக்கு நாம பணக்காரர்கள் என்று தெரியாதுனு சொன்ன, அதனாலத்தான் இந்த கெட்டப்பில் வந்து இருக்கிறேன் என்று சொல்ல, இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப ஒவர்மா என்று சொல்லுகிறான். உடனே அபிராமி அதவிடுடா என் மருமகள்கள் எங்கே என்று கேட்க, நான்கு பேரும் விளக்கு கொண்டு வந்து ஏற்றுகின்றனர். அப்போது, ரேவதி வந்து விளக்கு ஏற்ற, அம்மா இது தான் ரேவதி இவளுக்கு என் கூட சண்டை போடுவது தான் வேலையே என்று சொல்கிறான்.

பதறிப்போன கார்த்திக்: அப்போது, அபிராமி, என் மருமகள்கள் எல்லாருமே ரொம்ப அம்சமா இருக்காங்கடா என்று சொல்கிறாள். அடுத்து ஸ்வேதாவை பார்த்துவிட்டு, அம்மா இவதான் இந்த வீட்டோட கடைகுட்டி என்று, தீபா போலவே நல்ல பாடுவா என்று சொல்லிக்கொண்டு இருக்கிறான். அப்போது, சாமுண்டீஸ்வரியின் மகள்கள் திடீரென வந்து யார் கூட பேசிக்கிட்டு இருக்க என்று கேட்டு, ஷாக் கொடுக்கின்றனர். இதனால், பதறிப்போன கார்த்திக், அபிராமி அத்தை என்று உளறுகிறான். என்னது அத்தையா என்று கேட்க, உடனே அபிராமி, நான் கார்த்திக்கின் அம்மா என்று சொல்லி சமாளிக்கிறாள்.

திட்டும் ரேவதி: அதன் பிறகு சாமுண்டேஸ்வரியின் மகள்கள் அபிராமியின் கோலத்தை பார்த்துவிட்டு, ஓ அம்மாவா, நான் கூட கோவிலில் பிச்சை எடுப்பவர்கள் என்று நினைத்துவிட்டேன் என்று சொல்லி கிண்டல் அடிக்க, கடுப்பான ரேவதி பெரியவர்களிடம் அப்படியெல்லாம் பேச கூடாது என்று திட்டுகிறாள். பிறகு கார்த்திக் சாமுண்டேஸ்வரியின் மகள்களை அறிமுகம் செய்து வைக்கிறான். உடனே ரேவதி, உங்களால் தான் உங்க அம்மா இப்படி இருக்காங்க, உங்க அம்மாவை நல்லபடியா பார்த்துக்கொள்ளக்கூட உங்களுக்கு தெரியவில்லை என்று திட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.



Click it and Unblock the Notifications











