என் கணவரை கொன்ற சாமுண்டீஸ்வரி இன்னும் உயிரோட இருக்கா..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: கார்த்திக்கின் அம்மா அபிராமி, அண்ணன் மகள்களை பார்க்கும் ஆசையில் கோவிலில் காத்துக்கொண்டு இருக்கிறார். கோவிலுக்கு வரும் சாமுண்டீஸ்வரியின் மகள்கள் கார்த்திக் யாருடனே பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டு யார் என்று கேட்க, கார்த்திக் அம்மா என்று சொல்லுகிறான். இதையடுத்து, அபிராமியின் கோலத்தை பார்த்துவிட்டு, ஓ அம்மாவா, நான் கூட கோவிலில் பிச்சை எடுப்பவர்கள் என்று நினைத்துவிட்டேன் என்று சொல்லி கிண்டல் அடிக்க, கடுப்பான ரேவதி பெரியவர்களிடம் அப்படியெல்லாம் பேச கூடாது என்று திட்டுகிறாள்.
பிறகு கார்த்திக் சாமுண்டீஸ்வரியின் மகள்களை அறிமுகம் செய்து வைக்கிறான். உடனே ரேவதி, உங்களால் தான் உங்க அம்மா இப்படி இருக்காங்க, உங்க அம்மாவை நல்லபடியா பார்த்துக்கொள்ளக்கூட உங்களுக்கு தெரியவில்லை என்று பிடித்து திட்டுகிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், அபிராமி சாமுண்டீஸ்வரியின் மகள்களை பார்த்துவிட்டு ரேவதியிடம் தன்னை அத்தை என கூப்பிட சொல்லி ஆசைப்பட ரேவதியும் அத்தை என சொல்லி கூப்பிட அந்த சந்தோஷத்துடன் அங்கிருந்து கிளம்புகிறாள். அதைத்தொடர்ந்து சிவனாண்டி குடும்பத்தில் அவனது அம்மா இறந்து போன தன்னுடைய கணவரின் போட்டோ முன்னாடி நின்று இவருடைய சாவுக்கு காரணம் அந்த சாமுண்டீஸ்வரி தான். அவ இன்னும் உயிரோட இருக்கா .. உன் அப்பாவ கொன்னவள இன்னும் எதுவும் பண்ணாம சும்மா இருக்க என சிவனாண்டியை பிடித்து திட்டுகிறாள்.
சாமுண்டீஸ்வரியை கொல்ல முடிவு: தனது கணவனுக்கு பிடித்தது எல்லாம் செய்து படையல் போட்டு அதை சிவனாண்டிக்கு கொடுத்து சாப்பிட சொல்ல, சிவனாண்டியும் ரசித்து ருசித்து சாப்பிட என்ன நீ அந்த சாமுண்டீஸ்வரி எதுவும் பண்ணல என கோபப்பட அவன் போன வாரம் கூட ரெண்டு ஆட்களை அனுப்பி இருந்ததாக சொல்ல உன் அப்பாவ கொன்னவளை உன் கையால தான் கொல்ல வேண்டும் என திட்டுகிறாள். இதைத்தொடர்ந்து சிவனாண்டி தன்னுடைய மனைவி சந்திரகலாவுக்கு போன் போட்டு சாமுண்டீஸ்வரி என்ன பண்றா என்று விசாரிக்க செங்கல் சூளைக்கு கிளம்பி கொண்டிருப்பதாக சொல்கிறாள். சிவனாண்டி இன்னையோட அவ கதை முடிந்தது என்று சொல்கிறான். உடனே சந்திரகலா கார்த்திக்கை அங்க வர விடாமல் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி போனை வைக்கிறாள்.
இதைத் தொடர்ந்து சிவனாண்டி சாமுண்டீஸ்வரி கொல்ல சூளைக்கு கிளம்ப தயாராக இங்கே ஸ்வேதா சாமுண்டீஸ்வரியை யாரோ அறிவாளால் வெட்டுவது போல கனவு கண்டு பயந்து அழுகிறாள். இந்த விஷயத்தை சாமுண்டீஸ்வரியிடமும் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











