பகைக்கு காரணம் என்ன? உண்மையை உடைக்கும் சாமுண்டேஸ்வரி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில்!
சென்னை: நேற்றைய எபிசோடு, சூளைக்கு சாமுண்டீஸ்வரி தனியாக வர, அவளை கொல்லும் திட்டத்தோடு சிவனாண்டி அருவாளால் வெட்ட வருகிறான். சுதாரித்துக்கொண்ட சாமுண்டீஸ்வரி, அவனிடம் சண்டை போட்டு பிடித்து தள்ளி விடுகிறாள். இருந்தாலும் ரவுடிகள் சாமுண்டீஸ்வரியை லாக் செய்து விட சிவனாண்டி குத்த வரும் நேரத்தில் கார்த்திக் சிவனாண்டியையும் அவனது ஆட்களையும் அடித்து ஓட விடுகிறான்.
சாமுண்டீஸ்வரி சிவனாண்டியை பார்த்து உங்க அப்பா என் கையால் தான் செத்தான், உனக்கும் என் கையால் தான் சாவு என்று சொல்ல இதை கேட்ட கார்த்திக் ஷாக் ஆகிறான். இதையடுத்து இன்று நடக்கப்போவது என்ன என்று பார்க்கலாம்

கார்த்திகை தீபம்: இன்றைய சீரியலில் வீட்டுக்கு வந்த சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு இருப்பவர்களிடம், செங்கல் சூளையில் நடந்த விஷயத்தை சொல்ல அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அடுத்து கார்த்திக் சாமுண்டீஸ்வரியிடம் கோவிலில் ஒரு முறை உங்களை கொல்ல வந்தாங்க.. திரும்பவும் ஒரு முறை கொல்ல வந்தாங்க. நான் இத்தனை நாளா அவங்க மேலத்தான் தப்பு என்று நினைத்தேன். ஆனால், நீங்க தான், அவரோட அப்பாவை கொன்று இருக்கீங்க.
சாமுண்டீஸ்வரி சொல்லும் உண்மை: உண்மையில் உங்களுக்கும் அந்த குடும்பத்திற்கும் என்ன பிரச்சனை என்று சொல்லியே ஆக வேண்டும் என்று கேட்கிறான். உடனே சாமுண்டீஸ்வரி உனக்கு எதுக்கு சொல்லணும்? நீ இந்த வீட்டோட டிரைவர் தானே என்று சொல்ல, கார்த்திக் நான் தான் உங்களை காப்பாத்தி இருக்கேன். யார் பக்கம் என்ன நியாயம் இருக்குனு நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி அவனை ஒரு ரூமுக்குள் அழைத்து செல்கிறாள்.
குழந்தையை கொன்ற கணவன்: ரூமுக்குள் அழைத்து சென்றதும் கார்த்திக் பல கேள்விகளை முன் வைக்க சாமுண்டீஸ்வரி காரணம் சொல்ல தொடங்குகிறாள். பிளாஷ்கட் ஓப்பனாக சிவகாமி ( சாமுண்டேஸ்வரியின் அம்மா ) என்பவர் பிரசவ வலியில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு சாமுண்டேஸ்வரி உட்பட ஏற்கனவே மூன்று மகள்கள் உள்ள நிலையில் சிவகாமியின் கணவர் இந்த முறை ஆண் குழந்தை பிறக்கும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தில் மருத்துவச்சி வெளியே வந்து பெண் குழந்தை பிறந்து இருப்பதாக சொல்ல கடுப்பாகும் சிவகாமியின் கணவர் குழந்தையை தூக்கி வீசி கொன்று விட்டு வீட்டையும் கொளுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணதவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











