தீபாவை காப்பாற்றுவாரா கார்த்திக்.. கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், நர்ஸ் சக்தி மற்றும் ஆசிரமத்தில் இருப்பவர்களுடன் தீபாவுடன் கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர். அப்போது போலீசில் இருந்து தப்பித்த துங்கா, அந்த வழியாக வந்த வேனை வழி மறித்து அதில் ஏறிக்கொள்கிறான். அப்போது, வேனில் இருந்த சிஸ்டர், சார் இந்த வண்டியில் ஏறக்கூடாது இறங்குகள் என்று சொல்ல, துங்கா தன்னுடைய கார் ரிப்பேர் ஆகிவிட்டதாக பொய் சொல்லி உதவி கேட்கிறான். அப்போது பின் சீட்டில் இருக்கும் சக்தி, துங்காவை பார்த்துவிட்டு இது என்னடா புது குழப்பம் என்று சொல்லி சீட்டுக்கு அடியில் தீபாவையும் சேர்த்து மறைத்துக்கொள்கிறாள்.

இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா துணி கடைக்கு வந்து சிங் போல தனது கெட்டப்பை மாற்றிக்கொண்டு வெளியே வருகிறாள். அப்போது கடை ஓனர் சந்தேகப்பட்டு, யார் நீ எதுக்கு இந்த மாறுவேஷம், யார ஏமாத்த பாக்குற என்று போலீசுக்கு தகவல் கொடுக்க, அவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி கச்சேரி நடக்கும் இடத்திற்கு வருகிறாள். எது நடந்தாலும் தீபா இங்கே தான் வருவாள். அவள் வந்ததும் சுட்டுத்தள்ள வேண்டியதுதான் என்று கூட்டத்தோடு கூட்டமாக இருக்கிறாள். இதையடுத்து இன்று நடக்கப்போவது என்ன என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், தீபா வேஷத்தில் இருக்கும் கீதா, வேண்டும் என்றே துங்காவின் அடி ஆட்கள் கண்ணில் படும்படி நடந்து வருகிறாள். இதைப்பார்த்த ரௌவுடிகள் கீதாவை, ஏய் நீ இங்கே தான் இருக்கியா என்று கேட்டு துரத்துகின்றனர். இதையடுத்து, வேனில் இருக்கும் துங்காவிற்கு போன் செய்து, தீபா கிடைத்துவிட்டாள் அவளைத்தான் துரத்திக் கொண்டு போகிறோம் என்ற சொல்கிறான்.

துங்காவிடம் சிக்கிய தீபா: மறுபக்கம் வேனில் இருக்கும் துங்கா, ஏய் அவளை விடாம துரத்துங்கடா என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறான். அப்போது வேனில் மறைந்து இருக்கும் சக்தியைப் பார்த்துவிட்டு, நீ இங்கே தான் இருக்கியா, அப்போ என் ஆளுங்க துரத்துவது கீதாவையா, இரண்டு பேரும் என்கிட்ட நல்லா மாட்டிக்கிட்டீங்களா... ஏய் சக்தி என்னை எத்தனை முறை ஓடவிட்ட, உன்னை சும்மாவிட மாட்டேன் என்று வேனை ஒரு இடத்திற்கு எடுத்து சென்று அனைவரையும் அடைத்துவைக்கிறான்.

தீபாவை காப்பாற்றுவாரா கார்த்திக்: மண்டபத்தில் ஐஸ்வர்யா, சிங் வேஷத்தில் பதற்றத்தோடு இருக்கிறாள், யாருக்காவது அடையாளம் தெரிந்துவிட்டால் அவ்வளவு தான் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறாள். அந்த நேரம் கார்த்திக்கு துங்காவிடம் இருந்து போன் வருகிறது. என்ன கார்த்திக், உன் பொண்டாட்டி கச்சேரிக்கு வந்து பாட்டுப்பாடுவானு நினைக்கிறாயா... இப்போ தீபா என்கிட்ட இருக்கா, தீபா மட்டுமில்ல அந்த நர்ஸ் சக்தி குழந்தைகள் அனைவரும் என்கிட்டத்தான் இருக்காங்க என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ண, மண்டபத்தில் இருந்து கிளம்பும் கார்த்திக் நேராக துங்கா இருக்கும் இடத்திற்கு வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X