சாமுண்டீஸ்வரி குடும்பத்தின் மீது வந்த திருட்டுப்பழி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில்!
சென்னை: நேற்றைய எபிசோடு, சிவனான்டி அப்பாவை கொன்றதற்கான காரணத்தை சாமுண்டீஸ்வரி கார்த்திக்கிடம் சொல்லுகிறார். பிளாஷ்கட் ஓப்பனாக சிவகாமி ( சாமுண்டீஸ்வரியின் அம்மா ) என்பவர் பிரசவ வலியில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு சாமுண்டீஸ்வரி உட்பட ஏற்கனவே மூன்று மகள்கள் இருக்கும் நிலையில், நான்காவதாக பெண் குழந்தை பிறக்கிறது.
இதனால், கடுப்பான சிவகாமியின் கணவர் குழந்தையை தூக்கி வீசி கொன்று விட்டு வீட்டையும் கொளுத்துகிறான். இதனால், இவர்கள் செல்ல இடம் இல்லாமல் தவிக்கின்றனர். இந்த சமயத்தில் சாமுண்டீஸ்வரியின் குடும்பத்தை அழைத்துச் செல்லும் பரமேஸ்வரி, கோவிலுக்கு சொந்தமான ஒரு வீட்டில் தங்க வைக்கின்றனர். இதையடுத்து, சாமுண்டீஸ்வரி குடும்பம் மொத்தமும் அங்கேயே செட்டிலாக சில வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

கார்த்திகை தீபம்: இந்த நேரத்தில் தான் பெரிய மனுஷி ஆனேன், என் சடங்கை அம்மா எல்லாரையும் கூட்டி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இதனால், அனைவரையும் வீட்டுக்கு அழைத்து இருந்தார்கள். அப்போது, ராஜசேதுபதி மாமா அதாவது என் கணவரின் அப்பா தான் எனக்கு எல்லாத்தையும் செய்து என் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தார். இந்த நேரத்தில் தான் கோவிலில் நகைகள் திருட்டு போனது. அந்த நகையை யார் எடுத்து இருப்பார்கள் என்று பஞ்சாயத்து போய் கொண்டு இருந்தது.
கோவில் நகை திருட்டு: ஒரு பக்கம் நகைகளை தேடும் பணிகள் தீவிரமாக நடக்க, என் வீட்டில் சடங்குக்கான வேலை நடந்துக்கிட்டு இருந்தது. அப்போது, எங்க வீட்டில் கோவிலில் திருடு போன நகை இருந்ததை பார்த்த ஒரு பெண், அதை ராஜ சேதுபதியிடம் கொடுத்தார். அந்த நகையை பார்த்த அவர், எங்களை நம்புவார் என்று நினைத்தோம். ஆனால், ராஜ சேதுபதி உனக்கு கோவில்ல வேலை எல்லாம் போட்டு கொடுத்து இங்கு தங்க வைத்தேன்.ஆனால், நீ இப்படி நடிகை திருடி விட்டியே என்று கேட்டுவிட்டார்.
திடுட்டுப்பழி: என் அம்மா அவரிடம் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதனால் இந்த ஒட்டு மொத்த ஊரும், ஒரு நகை இங்கே இருக்கிறது என்றால், மற்ற நகையும் இங்கே தான் இருக்கும் என்று பஞ்சாயத்தை கூட்டி என் குடும்பத்தை அசிங்கப்படுத்தினார்கள். இதனால்,என் குடும்பத்தின் மீது திருட்டுப்பழி வந்து விழுந்துவிட்டது என்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











