லாரியில் அடிபட்டு இறந்த ரௌடி.. கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: சனிக்கிழமை எபிசோடில், தீபா மற்றும் கீதா இருவரையும் துங்கா கடத்தி வைத்துக்கொண்டு கார்த்திக்கிற்கு போன் செய்து, என்ன கார்த்திக், உன் பொண்டாட்டி கச்சேரிக்கு வந்து பாட்டுப்பாடுவானு நினைக்கிறாயா... இப்போ தீபா என்கிட்ட இருக்கா, தீபா மட்டுமில்ல அந்த நர்ஸ் சக்தி குழந்தைகள் அனைவரும் என்கிட்டத்தான் இருக்காங்க என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ண, மண்டபத்தில் இருந்து கிளம்பும் கார்த்திக் நேராக துங்கா இருக்கும் இடத்திற்கு வருகிறான்.
இன்றைய எபிசோடில், துங்காவின் குடோனுக்குள் என்ட்ரி கொடுத்த கார்த்திக் துங்காவை எதிர்த்து கடுமையாக சண்டை போடுகிறான். ஒரு கட்டத்தில் துங்கா அடி தாங்க முடியாமல் கார்த்தியிடம் இருந்து தப்பி ஓட லாரியில் அடிபட்டு இறந்துவிடுகிறான். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சரவணன் அங்கு இருக்கும் அடியாட்களை கைது செய்து அழைத்து செல்கிறார்.

தீபாவை அழைத்து வந்த கார்த்திக்: இதை தொடர்ந்து இங்கே கச்சேரி நடக்கும் இடத்தில் தீபாவிற்காக காத்திருக்கின்றனர். ஜானகி தீபா வர வேண்டும், அவ பாட வேண்டும். அது அவளோட அப்பாவின் நீண்ட நாள் கனவு என கண் கலங்குகிறாள். கார்த்திக் தீபாவை மீட்டு அழைத்து வருகிறான் என்ற தகவல் கிடைக்க அனைவரும் சந்தோஷம் அடைகிறார்கள். இதை எல்லாம் மாறுவேடத்தில் வந்துள்ள ஐஸ்வர்யா கவனித்துவிட்டு இங்கே தான் வரியாவா, உன் உயிர் என் கையாளத்தான் போக வேண்டும் என்று இருக்கு என்று தீபாவை சுட ஐஸ்வர்யா துப்பாக்கியோடு இருக்கிறாள். இதையடுத்து, மண்டபத்திற்கு வரும் போலீஸ் ஐஸ்வர்யா துப்பாக்கியுடன் தப்பி வந்ததாக விஷயத்தை சொல்ல அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.
பாட்டுப்பாடிய தீபா: மண்டபத்திற்கு கார்த்திக் அழைத்து வர மொத்த குடும்பமும் கட்டிப்பிடித்து கதறி அழுகின்றனர். ஆனால், தீபாவிற்கு எதுவுமே தெரியாமல் கார்த்திக்கின் பெயரை மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கிறாள். இதனால், அதிர்ச்சி அடைந்த அபிராமி, தீபா எப்படி பாடுவா என்று கேட்க, தீபாவிற்கு பாட்டு என்றால் உயிர் அவளை மேடையில் உட்கார வைத்தால் பாடுவாள் என்று, தீபாவை மைக்கின் முன் உட்கார வைத்து, அனைவரும் பாடு தீபா... பாடு என்று சொல்லிக்கொண்டே இருக்க திடீரென ஒரு சத்தம் கேட்க, பயந்து போன தீபா..... கார்த்திக் என்று கத்துகிறாள், இதையடுத்து தீபாவிற்கு சுயநினைவு வர மேடையில் பாடுகிறாள்.
மேடைக்கு கீழே மாறுவேஷத்தில் இருக்கும் ஐஸ்வர்யா, தீபாவை சுட்டுக்கொள்வதற்காக காத்துக்கொண்டு இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











