தீபா சமாதியில் கார்த்திக் எடுத்த சபதம்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
சென்னை: நேற்றைய எபிசோடில், தீபா பாட்டுபாடிக்கொண்டு இருக்கும் போதே, மூக்கில் இருந்து ரத்தம் வந்து மயங்கி விழுகிறாள். அப்போது தீபா, கார்த்திக்கிடம் நீங்க வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ வேண்டும் என்று சொல்லி சத்தியம் செய்ய சொல்லிகேட்க, கார்த்திக் சத்தியம் செய்ய மறுத்து கதறி அழுகிறான். அப்படியே கார்த்திக்கின் மடியில் தீபாவின் உயிர் பிரிந்துவிடுகிறது.
இதைப்பார்த்து அனைவரும் கதறி அழ, நர்ஸ் சக்தி அய்யோ, உங்களை பாதுகாக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் எல்லாம் வீணா போச்சே, எப்படியாவது உங்களை, உங்க கணவர் கூட வாழவைக்க வேண்டும் என்று ஆசைபட்டேனே என்று கதறி அழுகிறாள். ஒட்டுமொத்த குடும்பமும் என்ன செய்வது என்று தெரியாமல் நிலை குலைந்து இருக்கிறது.

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில் தீபாவின் போட்டோவிற்கு மாலை போட்டு இருக்க அனைவரும் அழுதபடி இருக்கின்றனர். அப்போது, தீபாவின் அம்மா ஜானகி, அய்யோ தீபா என்ன விட்டுவிட்டு போய்ட்டியா, இந்த குடும்பம் நல்லா இருக்க வேண்டும் என்று உன் வாழ்க்கையை பத்திக்கூட கவலைப்படாமல் ஒன்னு ஒன்னையும் பார்த்து பார்த்து செய்தீயே உனக்கா கடவுள் இப்படி ஒரு நிலைமையை கொடுக்கணும், உன் அப்பாவும் போய்ட்டாரு, நீயும் போய்ட்டியே என்று ஜானகி கதறி அழுகிறாள்.
கதறி அழுத குடும்பம்: ஜானகியை சமாதானப்படுத்தும் அபிராமி, தீபா இந்த வீட்டின் மகாலட்சுமி, ஆரம்பத்தில் நான் கூட அவளை தவறாகத்தான் புரிந்து கொண்டேன். ஆனால், கடைசியில் தனது அன்பால என் மனசை மாத்துனா. தன் வாழ்க்கையை பற்றிக்கூட யோசிக்காமல், தாலியை கழட்டி என் உயிரை காப்பாத்துனா என, மீனாட்சி, மைதிலி என குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருத்தராக அழுது புலம்புகின்றனர்.
கீதாவை கைது செய்த போலீஸ்: இதையடுத்து, போலீஸ் கார்த்திக் வீட்டிற்கு வந்து கீதாவை கைது செய்ய வந்ததாக சொல்கிறார்கள். கார்த்திக் கீதாவிடம் நீங்க பயப்படாமல் இவங்க கூட போங்க.. உங்களுக்கு வாக்கு கொடுத்த மாதிரி நான் உங்களை காப்பாற்றுகிறேன். உங்களை கண்டிப்பா வெளியே கொண்டு வருவேன் என்று சொல்ல கீதா போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படுகிறாள்.
வெளியே வந்த கீதா: அதன்பின் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும் கீதா, உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை கார்த்திக், இப்போ தான் தீபா இறந்தாங்க, நிச்சயம் நீங்க மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பீங்க அப்படி இருக்கும் போது, என்னை வெளியில் கொண்டுவர இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கீங்க இதற்கு நான் என்ன செய்ய போகிறேன் என்றே தெரியவில்லை என்று சொல்லி கண் கலங்குகிறாள்.
கார்த்திகை தீபம் சீசன் 2: உடனே கார்த்திக், உங்களை நான் தீபாவோட தங்கையாகத்தான் பார்க்கிறேன். தீபா உருவத்தில் இருக்கும் நீங்க நிச்சயம் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வெளியில் கொண்டு வந்தேன். நீங்க இங்கே இருந்து பிஸ்னசை பார்த்துக்கோங்க, நான் மன நிம்மதிக்காக என் ஊருக்கு போகிறேன் என்று கீதாவிற்கு டாடா காட்டிவிட்டு போகிறார். இத்துடன் கார்த்திகை தீபம் சீரியல் முடிவடைகிறது. வரும் திங்கள் முதல் புத்தம் புதிய கிராமத்து கதையில் புதிய கதாபாத்திரங்களுடன் இந்த கார்த்திகை தீபம் சீசன் 2 ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











