ராஜேஸ்வரிக்கு சரியான ஆப்பு வைத்த கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோட்டில், ராஜேஸ்வரி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அபிராமி மீது புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இதையடுத்து வந்த அட்வகேட், இது வரதட்சணை கேஸ், இதில் இருந்து அம்மா வெளியில் வருவது கஷ்டம் தான். கேஸ் கொடுத்தவர்களை வாபஸ் வாங்க வையுங்க என்று சொல்ல, கார்த்திக், ஐஸ்வர்யாவின் அம்மாவை பார்த்து பேசுகிறேன்.

அப்போது, ராஜேஸ்வரி என் பொண்ணை உள்ள தள்ளிட்டு நீங்க மட்டும் எப்படி நல்லா இருக்கவிடுவேனா என்று சொல்ல. கார்த்திக், எங்க அம்மா வரதட்சணை கேட்டாங்களா... ஏன் இப்படி பொய் சொல்றீங்க, என்று கேட்க, வரதட்சணை கேட்கலனு எனக்கும் உனக்கும் தான் தெரியும். ஆனால், நீங்க 100 சவரன் நகை கேட்டீங்க, பணம் கேட்டீங்க என்று கோர்ட்டில் வந்து அழுது நாடகம் போடுவேன் என்று சொல்கிறாள்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இதையடுத்து, நீதிமன்றத்தில்,அபிராமி தரப்பு லாயர் ஆஜராகி, இந்த குடும்பத்திற்கு ஏகப்பட்ட சொத்து இருக்கும் போது, இவர்கள் ஏன் ஐஸ்வர்யாவை கொடுமைப்படுத்தப்போகிறார்கள் என்று சொல்லி வாதாடுகிறார். உடனே, ராஜேஸ்வரி இவர்களிடம் இருக்கும் பணத்தை வைத்து உண்மையை மறைக்க பார்க்கிறார்கள். என் மகளை பணம் கேட்டு கொடுமைப்படுத்தினார்கள் என்று சொல்லி, அபிராமி மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைக்கிறார்.

வீடியோவை காட்டிய கார்த்திக்: இதையடுத்து, இந்த அம்மா சொல்வது எல்லாம் பொய் என்று கத்த, அப்போது நீதிபதி எதுவாக இருந்தாலும், இந்த கூண்டில் வந்து பேசுங்க என்ற சொல்ல, கூண்டுக்கு வரும் கார்த்திக். எங்க அம்மா பணத்திற்கு ஆசைப்படாதவர்கள், எங்க கம்பெனி தொழிலாளர்களுக்கு பல உதவிகளை செய்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, எங்க அம்மா எப்படி வரதட்சணை கேட்பார்கள். இந்த அம்மா சொல்வது எல்லாம் பொய், அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கு என்று, கார்த்திக் ராஜேஸ்வரியுடன் பேசிய வீடியோவை ஆதாரமாக காட்டுகிறான்.

10 ஆண்டு சிறை: அந்த வீடியோவில் ராஜேஸ்வரி, அபிராமி வரதட்சணை கேட்கவில்லை என்று உனக்கும் எனக்கும் தான் தெரியும் நீதிபதிக்கு தெரியாதே என்று பேசியதை பார்த்த நீதிபதி. ராஜேஸ்வரி குடும்ப பகை காரணமாக அபிராமி மேல் பொய் வழக்கு போட்டு இருப்பது தெரிய வருகிறது. இதனால் கோர்ட்டை அவமானப்படுத்தியதால் ராஜேஸ்வரிக்கு 10 நாள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்ததோடு, அபிராமி விடுதலை செய்யப்படுகிறார்.

இதை கொண்டாடும் வகையில் தீபா இருக்கும் ஆசிரமத்தில் மீனாட்சி மற்றும் மைதிலி ஆகியோர் சாப்பாடு கொடுக்க அப்போது இன்னொருத்தருக்கும் கொடுங்க, உடம்பு முடியாமல் ரூமில் இருப்பதாக சொல்ல மீனாட்சி நானே கொண்டு வந்து தரேன் என்று தீபா இருக்கும் ரூமை நோக்கி செல்ல மைதிலி இங்க இவங்களுக்கு கொடு என்று மீனாட்சியை கூப்பிட தீபாவை பார்க்க முடியாமல் போய் விடுகிறது. இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X