மொக்கையாக நகரும் கதை.. கிளுகிளுப்புக்காக கதையை மாற்றிய இயக்குநர்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோட்டில், அபிராமி வரதட்சணை கேட்கவில்லை என்ற உண்மையை நீதிமன்றத்தில் கார்த்திக் நிரூபித்ததை தொடர்ந்து, கோர்ட்டை அவமானப்படுத்தியதால் ராஜேஸ்வரிக்கு 10 நாள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்ததை தொடர்ந்து ராஜேஸ்வரி சிறைக்கு செல்கிறாள்.
இதையடுத்து, வீட்டில் கீதா, தலைவலிக்கு மருந்து தேடும் போது தீபா, கார்த்திக் மீதான காதல் குறித்து அந்த டைரியில் எழுதி இருக்கிறது. அதில் இருவரும் ஹனிமூன் சென்ற போது நடந்ததை எழுதி வைத்து இருக்கிறாள் தீபா. அதை கீதா படிக்க அப்படியே பிளாஷ் பேக் செல்கிறது. இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடு, கார்த்திக் தீபா இருவரும் ரெஸ்டாரண்டுக்கு வருகின்றனர். அப்போது, தீபாவிற்கு மீனாட்சியிடம் இருந்து போன் வருகிறது. அப்போது, மீனாட்சி, தீபா இதுதான் நல்ல சான்ஸ் இதை பயன்படுத்தி கார்த்திக் மனதில் இடம்பிடிக்க வேண்டியது உன் வேலை, அத்தை பத்தியோ, நக்ஷத்திரா பற்றியோ கவலைப்படாமல் இரு என்று சொல்விட்டு போனை வைக்கிறாள்.
செம ரொமான்ஸ்: இதையடுத்து, இருவரும் அந்த ரெஸ்டாரண்டை சுற்றிப்பார்த்த போது அங்கு ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்க, அதில் இருந்த ஹீரோயின் கார்த்திக்கை பார்த்து வழிந்து வழிந்து பேசுகிறாள் இதைப்பார்த்து கடுப்பாகும் தீபா. இங்கே இருக்கவே எனக்கு பிடிக்கல இங்கே இருந்து போகலாம் என்று சொல்ல இருவரும் கடற்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டு இருக்கின்றனர்.
தீபாவை கடித்த பாம்பு: பின் இருவரும் ரூமுக்கு வெளியில் பல விஷயம் குறித்து பேசிக்கொண்டு இருக்க தீபா திடீரென அப்படியே சரிந்து விழுகிறாள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக், தீபாவை அப்படியே தாங்கிபிடித்து, மெத்தையில் படுக்கவைத்து விட்டு, ரிசப்ஷனுக்கு போன் செய்து நடந்ததை சொல்ல, ரூமுக்கு வரும் மருத்துவர் தீபாவை பரிசோதனை செய்ததில் அவரை பாம்பு கடித்து இருப்பதாக சொல்ல கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான்.
ரொமான்ஸ்: சாதாரண பாம்பு தான் விஷப்பாம்பு இல்லை, பயப்பட வேண்டியது இல்லை, இருந்தாலும் இந்த நேரத்தில் நைட்டு மட்டும் தூங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு செல்கிறார். இதனால் கார்த்திக் நாம ரூமுக்குள்ள இருக்க வேண்டாம் என்று சொல்லி தீபாவை வெளியே அழைத்து வருகிறான். இந்த விஷயம், ஷூட்டிங்கிற்காக வந்து இருப்பவர்களுக்கு தெரியவர, தீபா தூங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நைட் எல்லாம் கூட்டு சேர்ந்து ஆட்டம் பாட்டம் என என்டர்டெயின்மென்ட் செய்கின்றனர்.
கார்த்திகை தீபம் சீரியலில் இப்போது, தீபா படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில், கதை மொக்கையாக செல்வதால், சுவாரசியத்திற்காக கீதாவை டைரியை படிக்க வைத்து கார்த்திக் தீபா ரொமான்சை காட்டி கதையில் சுவாரசியத்தை கூட்டி இருக்கிறார் இயக்குநர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











