தீபாவுக்காக தர்மலிங்கம் எடுத்த முடிவு.. கார்த்திக் காப்பாற்ற போவது எப்படி? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோட்டில், ஹனிமூன் சென்ற இடத்தில், தீபாவை பாம்பு கடித்ததையும், அப்போது கார்த்திக் கவனித்துக்கொண்டதையும் பற்றி தீபா டைரியில் எழுதி வைத்து இருக்கிறாள். இதைப்படித்த கீதா, தீபா கார்த்திக்கை எப்படி எல்லாம் காதலித்து இருக்காங்க, அதே போல கார்த்திக்கும் தீபாவை மனப்பூர்வமா காதலிக்கிறார். இவங்க ரெண்டு பேரும் சீக்கிரம் சேர வேண்டும், கூடிய சீக்கிரம் தீபா திரும்பி வரணும் என்று கடவுளிடம் வேண்டி கொள்கிறாள். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.
கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், வீட்டில் தர்ம லிங்கம் சோகமாக இருக்க அப்போது அங்கு வரும் கார்த்திக், ஏன் சார் நீங்க தீபாவை நினைச்சு கஷ்டப்படுறீங்க நிச்சயம் அவங்க கிடைச்சிடுவாங்க என்று சொல்கிறான். அப்போது, தீபா சின்ன வயசுல இருந்து ரொம்ப கஷ்டப்பட்ட பொண்ணு, தீபாவளி, பொங்கலுக்கு கூட அவளுக்கு நான் துணி எடுத்து கொடுத்தது இல்ல. அந்த நேரத்திலும் என் குடும்பத்திற்காக என் கூட இருந்து கஷ்டப்பட்டாள்.

கவலைப்படாதீங்க: தன்னுடைய தம்பியோட மருத்துவ செலவுக்காக தன்னுடைய குரலையே அடமானம் வச்சுட்டா. உங்கள கல்யாணம் பண்ண பிறகுதான் அவ கொஞ்சம் சந்தோஷமா இருக்க ஆரம்பிச்சா. நீங்க அவளுக்கு கிடைத்தது அவ செய்த பாக்கியம். எப்படியாவது தீபாவை கண்டுபிடிக்கணும் என்று சொல்லி வருத்தப்பட்டு பேச கார்த்திக் கூடிய சீக்கிரம் கண்டுபிடித்து விடலாம் சார் என்று ஆறுதல் சொல்கிறான்.
போலீஸ் ஸ்டேஷனில் ரௌடி: இன்னொரு பக்கம் ஆசிரமத்தில் இருக்கும் சக்தி, தீபாவை தேடி யாரும் வராத காரணத்தினால், இனிமேல் தீபாவை நாம் வைத்து கொண்டு இருக்க முடியாது, அவங்க துங்காகிட்ட மாட்டிக்கிட்டா ரொம்ப கஷ்டமாகிவிடும் என்று நினைத்துவிட்டு, நாம போலீஸ் ஸ்டேஷனில் சென்று விஷயத்தை சொல்லலாம் என்று முடிவெடுத்துவிட்டு, சக்தி ஸ்டேஷனுக்கு வருகிறாள். ஆனால், அந்த நேரத்தில் அதற்கு முன்னதாக துங்கா, ஐஸ்வர்யாவை பார்க்க ஸ்டேஷனுக்கு வந்திருக்க அதைப் பார்த்து சக்தி தனது மனதை மாற்றிக் கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறான்.
தர்மலிங்கம் எடுத்த முடிவு: அடுத்து கோவிலுக்கு வந்த தர்மலிங்கம் தீபா கிடைக்கும் வரை வாசித்துக் கொண்டே இருக்கப் போவதாக சொல்லி உட்கார்ந்து நாதஸ்வரம் வாசிக்க தொடங்குகிறார். இது சமயத்தில் ஷக்தி கோவிலுக்கு வர இங்கு நடப்பதை பார்த்து, ஒருவேளை தர்மலிங்கம் தான் தீபாவோட அப்பாவாக இருப்பாரோ என யோசிக்கிறாள். அதே நேரத்தில் தூங்கா அனுப்பிய ஆள் சக்தியை பார்த்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











