மொக்கையாக நகர்ந்த கதை.. ட்ராக்கை மாற்றிய இயக்குநர்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில் தர்மலிங்கத்தை துங்கா கடத்திய வைத்து, நர்ஸ் சக்தியை மிரட்டியால், சக்தி வேறுவழியின்றி ஷக்தி தீபாவை ஆட்டோவில் அழைத்து வருகிறாள்.சக்தியை பார்த்த துங்கா, நீ என்கிட்ட என்னென்ன ஆட்டம் காமிச்சா, பாத்தியா கடைசில உன்னை என் இடத்திற்கே வர வெச்சேன்.யாருக்கிட்ட உன்வேலையை காட்டுனா என்ற சிரிக்கிறான்.

இதையடுத்து, தீபாவை குத்த வர, அந்த நேரம் பார்த்து தர்மலிங்கம் கட்டை அவிழ்ந்துக்கொண்டு, அனைத்து ரௌடிகளையும் அடித்து விட்டு,துங்கா தீபாவை குத்தும் நேரத்தில் வர, கத்திக்குத்துவை வாங்கிக்கொள்கிறான். இதைப்பார்த்து துங்கா பதறிப்போக அந்த நேரம் பார்த்து சக்தி தீபாவை மீண்டும் ஆட்டோவில் அழைத்து அங்கிருந்து த்ப்பித்து விடுகிறாள்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், துங்கா இருக்கும் இடம் தெரிந்து மூன்று பேரும் வர, தர்மலிங்கத்தை கத்தியால் குத்துப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து பதறிபோய், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். அப்போது, தர்மலிங்கம், மாப்பிள்ளை நான், வாழ்த்து முடித்துவிட்டேன்.நீங்களும் என் மகளும் நல்லபடியாக வாழவேண்டும், உங்கள மாதிரி ஒரு புருஷன் கிடைக்க என் மகள் கொடுத்து வைத்து இருக்க வேண்டும், அந்த ரௌடிக்கிட்ட இருந்து என் மகளை காப்பாற்று என்று சொல்ல, சார் உங்களுக்கு எதுவும் ஆகாது தைரியமாக இருங்க என்று சொல்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறாள்.

கவலையில் சக்தி: மறுபக்கம் சக்தி மீண்டும் தீபாவை ஆசிரமத்திற்கு அழைத்துவர, அங்கு இருப்பவர்கள் என்ன ஆச்சி என்று விசாரிக்க, சக்தி நடந்ததை சொல்லிகிறாள். ஒவ்வொரு முறையும் தீபா விஷயத்தில் ஏதோ தப்பு நடந்து கொண்டே இருக்கு என்ன செய்வ்து என்றே தெரியவில்லை. இப்படியே போன தீபாவை அவங்களை குடும்பத்தோட சேர்க்க முடியாமலே போய்விடும் போல என்று சக்தி வருத்தப்பட, அங்கு இருக்கும் சிஸ்டர், கவலைப்படாத சக்தி உன் கஷ்டத்திற்கு நிச்சயம் பலன்கிடைக்கும் என்று ஆறுதல் கூறுகின்றனர். இதையடுத்து,சக்தி கடவுளே வரும் வெள்ளிக்கிழமை அவங்க சபாவில் பாட போகிறார்கள் அதற்குள் தீபாவை நான் கார்த்திக்கிடம் ஒப்படைக்க வேண்டும் அதற்கு நீ தான் துணையாக இருக்க வேண்டும் என்று கர்த்தரிடம் வேண்டிக்கொள்கிறாள்.

ஆபாத்த நிலையில் : தர்மலிங்கம் மருத்துவமனையில் இருக்கும் தகவல் தெரிந்து அனைவரும் மருத்துவமனைக்கு வருகின்றனர். அப்போது அபிராமி, ஏன், கார்த்திக் நம்ம குடும்பத்திற்கு சோதனைக்கு மேல் சோதனை வந்து கொண்டு இருக்கு என்று சொல்லி அனைவரும் கதறி அழுகின்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதும், பலன் அளிக்காமல் தர்மலிங்கம் இறந்தவிடுகிறார். சிகிச்சை அறையில் இருந்து வெளியே வரும் டாக்டர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடிவில்லை. கத்தி குத்து ஆழமாக அவரின் வாயிற்றில் பாய்ந்ததால், ரத்தம் அதிகமாக வெளியேறி இருக்கு. அதுமட்டுமில்லாமல், அவரை கடுமையாக தாக்கியதால், அவரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை என்று சொல்ல மொத்த குடும்பமும் கதறி எழுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X