மயக்கத்தில் இருந்து எழுந்த தீபா.. கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோட்டில், நாம வீட்டில் இருந்தா, தீபா கிடைக்க மாட்டாள் என்று முடிவு செய்யும் கீதா, லெட்டர் எழுதி வைத்துவிட்டு துங்காவிடம் சென்றுவிடுகிறாள். இந்த விஷயம் தெரிந்து கீதாவை தேடி கார்த்திக் வருகிறான். அந்த நேரத்தில் துங்கா, கீதாவை குத்த வர அங்கே என்ட்ரி கொடுத்த கார்த்திக், துங்காவை அடித்துப்போட்டுவிட்டு கீதாவை காப்பாற்றுகிறான்.
அப்போது துங்காவின் அடியாள், அண்ணே, அந்த நர்ஸ் சொன்ன மாதிரி அது தீபா தான். இதுதான் உண்மையான கீதா. அந்த ஐஸ்வர்யா நம்மை நல்லா ஏமாத்தி இருக்கா என்று சொல்கிறான். ஆமாம் டா நீ செல்லுவது தான் சரி, இவதான் உண்மையான கீதா என்று சொல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

கார்த்திகை தீபம்: இன்றைய சீரியல், ஐஸ்வர்யா துங்காவிற்கு போனை போட்டு பேசி கொண்டிருக்க அருண் அங்கு வந்து விட ஐஸ்வர்யா பதற்றம் அடைகிறாள். யாருகிட்ட பேசிட்டு இருந்த என்று கேட்க ப்ரண்ட்டுடன் பேசிட்டு இருந்ததாக சொல்லி சமாளிக்கிறாள். அடுத்து துங்காவை சந்தித்து பேச அப்போ அவர் கீதா மாதிரியே தீபானு ஒருத்தி இருக்காளா என்று கேட்க ஐஸ்வர்யா வேறு வழியின்றி ஆமாம் என்று சொல்கிறாள். மேலும் தீபாவை பிடித்து விட்டால் அதை வைத்து கீதாவை கண்டு பிடித்து விடலாம் என்று துங்காவை ஏற்றி விடுகிறாள்.
அபிராமி கொடுத்த ஐடியா: இதை தொடர்ந்து அபிராமி வீட்டிற்கு சிலர் வந்து சரஸ்வதி சேவா நிகழ்ச்சிக்கு தீபாவோட கச்சேரியை புக் பண்ணி இருந்தோம். அவங்க வந்துடுவாங்களா என்று கேட்க அபிராமி வந்துடுவா என்று சொல்லி அனுப்பி வைக்க, அதிர்ச்சி அடைந்த கார்த்திக், தீபா இருக்கும் இடமே தெரியல, அப்படி இருக்கும் போது ஏன் மா இப்படி பண்ணீங்க என்று கேட்க, தீபா வந்துடுவா என்ற நம்பிக்கை தனக்கு, மேலும் தீபாவை கண்டுபிடிக்க இது நல்ல சேன்ஸ், தீபா இந்த நிகழ்ச்சியில் பாட போகிறாள் என்று எல்லா இடத்திலும் போஸ்டர் அடிச்சி ஒட்டுங்க என்கிறாள். இதையடுத்து கார்த்திக் மற்றும் ஆனந்த் அம்மாவின் ஆசைக்காக தீபாவை கூடிய சீக்கிரம் கண்டு பிடிக்கணும் என்று முடிவு எடுக்கின்றனர்.

மயக்கம் தெளிந்த தீபா: மறுபக்கம், ஆசிரமத்தில் தீபாவிற்கு நினைவு திரும்ப, நர்ஸ் சக்தி, தீபாவிடம், உங்களுக்கு நான் பேசுவது கேட்குதா, உங்க குடும்பத்தை பற்றி சொல்லுங்க என்று சொல்ல, தீபாவோ, கார்த்திக் கார்த்திக் என்ற பெயரை மட்டுமே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறாள். இதையடுத்து, தீபா குணமடைய வேண்டும் என்று குழந்தைகள் அவளுக்காக பிராத்தனை செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











