முடியலப்பா.. ஜவ்வு போல இழுக்கும் கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை:நேற்றைய எபிசோடில், தர்மலிங்கத்திற்கு இறுதி சடங்கை செய்த இனியன், அப்பாவை நினைத்து கதறி அழுதுக்கொண்டு இருக்க மைதிலி அழாத என்ற இனியனை சமாதானப்படுத்திக்கொண்டு இருக்க. அந்த இடத்திற்கு கார்த்திக், அருண்,ஆனந்த் மூன்று பேரும் வர, கார்த்திக் அவர்களை தனியாக அழைத்து. துங்கா போன் செய்து, இதுதான் உங்க குடும்பத்தின் முதல் பலி இனி அடுத்தடுத்து இப்படித்தான் நடக்கும் என்று சொல்லி மிரட்டுகிறான் என்று மிரட்டியதை சொல்கிறான்.

இதையடுத்து, கார்த்திக், இனி அவன் கிட்ட பேச்சு கிடையாது, வீச்சுத்தான். அவன் அடுத்த பிளான் போடுவதற்குள் நாம சரியான பிளான் போட்டு அவனை தூக்க வேண்டும், அப்போத்தான் நம்ம குடும்பம் நிம்மதியாக இருக்கும்,அப்போ தான் தீபாவையும் காப்பாத்த முடியும் என்று சொல்லி மூன்று பேரும் சேர்ந்து பிளான் போடுகின்றனர். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சிறையில் இருக்கும் ஐஸ்வர்யாவிடம் விஷயத்தை சொல்லுவதற்காக துங்கா, போலீஸ் ஸ்டேஷன் வந்து. தீபா கொல்லவந்த நேரத்தில் கிழவன் வந்து காரியத்தை கெடுத்துவிட்டான். அவன் மட்டும் வரவில்லை என்றால், இந்நேரம் தீபா கதை முடிந்து இருக்கும் என்று சொல்லுகிறான். இதனால் கடுப்பான ஐஸ்வர்யா, நீங்க இத்தனை பேர் இருந்தும், போயும் போயும் ஒரு கிழவின் கிட்ட கோட்டவிட்டு இருக்கீங்க அசிங்கமா இல்ல.ஏற்கனவே கார்த்திக் உங்க மேல கொல காண்டுல இருக்கான் இதுல நீங்க இப்போ மாமனாரை கொன்னு இருக்கீங்க, இனி மேல் தான் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறாள்.

கவலையில் ஜானகி: மறுபக்கம் வீட்டில், மைதிலி மற்றும் ஜானகி என இருவரும் தர்மலிங்கம் போட்டோ முன்னாடி அழுதுக்கொண்டு, என்கிட்ட சொல்லி இருக்கலாமே என்று சொல்ல, மைதிலி,உங்க உடம்பே சரி இல்லை இந்த நேரத்தில், இந்த விஷயத்தை சொல்லி உங்களுக்கு எதாவது ஆச்சுனா நான் என்ன பண்ணுவேன் அதான் சொல்லவில்லை என்று சொல்லுகிறாள். இந்த நேரத்தில் அபிராமி,அங்கு வர அவரைப்பார்த்து ஜானகி கண்கலங்கியபடி இனிமேல் நான் என்ன பண்ண போறேன்று என் அழ, அவர்களுக்கு அபிராமி ஆறுதல் சொல்லி இந்த வீட்டிலேயே இருங்க என்று சொல்ல, இல்ல சம்மந்தி அவர் வாழ்ந்த வீட்டிலேயே நான் அவரின் நினைவோடு வாழ்ந்துவிடுகிறேன் என்கிறாள்.

என்ட்ரியான ரூபஸ்ரீ: அதைத் தொடர்ந்து, ரூபஸ்ரீ தீபாவின் கச்சேரி குறித்து ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரை பார்த்துவிட்டு கார்த்திக் வீட்டுக்கு செல்ல, வீட்டில் இருக்கும் வேலை ஆட்கள், ஐஸ்வர்யா அம்மா இப்போ ஜெயிலில் இருக்காங்க, நீங்க ஸ்டேஷன் போனா பார்க்கலான்னு சொல்ல, பிறகு ரூபஸ்ரீ ஸ்டேஷனுக்கு வந்து ஐஸ்வர்யாவை சந்தித்து பேச, அவள் தீபாவை தள்ளிவிட்டது முதல் ஜெயிலுக்கு வந்த விஷயம் வரை அனைத்தையும் சொல்லுகிறாள். மேலும், எங்காவது தீபாவை பார்த்தால் தனக்கு தெரியப்படுத்தும்படி சொல்கிறாள்.

குழந்தைகள் கொடுத்த ஐடியா: இறுதியாக ஆசிரமத்தில் சக்தி தீபாவை எப்படி கச்சேரிக்கு அழைத்து செல்வது என யோசித்துக்கொண்டு இருக்கிறாள். அப்போது ஒரு சிறுவன் வேனில் வைத்து அழைத்துச் செல்லலாம். ஆசிரமத்தில் இருப்பவர்களை அப்படித்தான் அழைத்துச் செல்வார்கள். யாராவது கேட்டால் ஆசிரமக் குழந்தைகள் என சொல்லி சமாளிக்கலாம் என்று சொல்ல சக்தி சரியான ஐடியா.. அப்படியே செய்துவிடலாம் என முடிவெடுக்கிறாள்.நாங்க சந்தோஷமா இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட தீபா அக்கா குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்க வேண்டும் அதற்காக நாங்க இதை செய்கிறோம் என்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X