திட்டமிட்டபடி கச்சேரி நடக்குமா? தீபா வருவாளா? கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், ஆசிரமத்தில் சக்தி தீபாவை எப்படி கச்சேரிக்கு அழைத்து செல்வது என யோசித்துக்கொண்டு சோகமாக இருக்க. அப்போது அங்கிருக்கும் சிறுவர்கள், தீபா அக்காவை நம்ம ஆசிரம வேனிலேயே அழைத்துச்சென்றுவிடலாம். ஆசிரமத்தில் இருப்பவர்களை அப்படித்தான் அழைத்துச் செல்வார்கள். யாராவது கேட்டால் ஆசிரமக் குழந்தைகள் என சொல்லி சமாளிக்கலாம் என்று சொல்ல சக்தியும் ஓகே என்கிறார்.
நாங்க சந்தோஷமா இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட தீபா அக்கா குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்க வேண்டும் அதற்காக நாங்க இதை செய்கிறோம் என்கின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய சீரியலில், நர்ஸ் சக்தி அனைத்து குழந்தைகளையும் வண்டியில் ஏற்றிவிட்டு, அதில் தீபாவையும் உட்கார வைத்து இவங்களை எப்படியாவது இன்னைக்கு கச்சேரியில் பாடவைத்துவிட வேண்டும், தீபாவை குடும்பத்தோடு சேர்த்தால் தான் எனக்கு நிம்மதி, இதில் துங்கா வந்து கெடுக்காம எந்த தடங்கலும் நடக்காம நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும் கடவுளே என வேண்டிக்கொள்கிறாள்.
கச்சேரி நடக்குமா: மறுபக்கம் வீட்டில், அனைவரும் சோகமாக இருக்கின்றனர், அப்போது வரும் கார்த்திக் வாங்க எல்லாரும் மண்டபத்திற்கு போகலாம் என்று சொல்ல, அப்போது அபிராமி என்ன கார்த்திக் சொல்லற தீபா இன்னும் கிடைக்கவே இல்ல, அப்படி இருக்கும் போது எப்படி கச்சேரி நடக்கும் என்று வருத்தப்பட்டு கேட்க, நிச்சயம் கச்சேரிக்கு தீபா வருவாமா, நர்ஸ் சக்தி நிச்சயம் தீபாவை கூட்டிக்கொண்டு வருவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு என்று சொல்ல அனைவரும் காரில் ஏறி செல்கின்றனர்.
அப்போது அபிராமி இன்னைக்குத்தான் கச்சேரி என்று துங்காவிற்கு தெரியும்ல, அவன் எதாவது செய்யப்போறான் கார்த்தி என்று சொல்ல, ஆமாம் அம்மா நிச்சயம் எதாவது செய்வான். அதுக்குத்தான் நான் மண்டபத்தில் நிறைய பேர கண்காணிக்க நிறுத்தி இருக்கிறேன் என்று சொல்ல, மண்டபத்தில் மட்டும் நிறுத்துனா பத்தாது கார்த்திக், அந்த தெரு முழுக்க ஆளைநிறத்தி துங்கா உள்ளேயே வர முடியாதுபடி செய்யணும் என்கிறாள்.
ஐஸ்வர்யா போட்ட பிளான்: மறுபக்கம் சிறையில் ஐஸ்வர்யா, உடம்பு முடியவில்லை என்று சொல்லி நாடகமாட அவளை, இன்ஸ்பெக்டர் சரவணன் மருத்துவனைக்கு அழைத்து செல்ல,ஐஸ்வர்யா, போலீசுக்கு தெரியாமல், துப்பாக்கியை எடுத்துவைத்துக் கொள்கிறாள். இதையடுத்து, அந்த துப்பாக்கியை வைத்து போலீசை மிரட்டி தப்பிக்க முயற்சி செய்கிறாள்.
அதே நேரத்தில் ரூபஸ்ரீ ஐஸ்வர்யாவுடன் கூட்டு சேர்ந்து போட்ட திட்டத்தின் படி ஆசிரமத்திற்கு வந்து எனக்கு கார்த்திக் சாரை தெரியும் என்று சொல்லி தீபாவை சந்திக்க முயற்சி செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











