அபசகுணம்.. முருகன் சிலை உடைந்தது.. தீபாவிற்கு என்னாகுமோ.. கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், நர்ஸ் சக்தி தீபாவை குடும்பத்தோடு சேர்த்தால் தான் எனக்கு நிம்மதி, இதில் துங்கா வந்து கெடுக்காம எந்த தடங்கலும் நடக்காம நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும் கடவுளே என வேண்டிக்கொள்கிறாள்.

மறுபக்கம் வீட்டில், அனைவரும் சோகமாக இருக்கின்றனர், அப்போது அபிராமி என்ன கார்த்திக் சொல்ற தீபா இன்னும் கிடைக்கவே இல்ல, இப்படி இருக்கும் போது எப்படி கச்சேரி நடக்கும் என்று வருத்தப்பட்டு கேட்க, நிச்சயம் கச்சேரிக்கு தீபா வருவா அம்மா, நர்ஸ் சக்தி நிச்சயம் தீபாவை கூட்டிக்கொண்டு வருவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு என்று சொல்ல அனைவரும் காரில் ஏறி செல்கின்றனர். இதையடுத்த இன்றைய எபிசோடில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், எதர்ச்சையாக ஆசிரமத்திற்கு வரும் ரூபாஸ்ரீ, ஆசிரமத்திற்கு புதுசா குழந்தைகள் யாராவது வந்து இருக்கிறார்களா என்று விசாரிக்க, அங்கு இருக்கும் சிஸ்டர் புதுசா எந்த குழந்தையும் வரவில்லை, தீபா என்ற ஒரு அம்மா தான் சுயநினைவு இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்ல, ரூபாஸ்ரீ அதிர்ச்சி அடைந்து போய், அது தீபா தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறாள்.

zee tamil karthigai deepam

ஐஸ்வர்யா போட்ட பிளான்: இதையடுத்து, இந்த விஷயத்தை ஐஸ்வர்யாவிடம் சொல்ல, இருவரும் சேர்ந்து ஒரு திட்டம் போடுகின்றனர். அதாவது, ஆசிரமத்தில் இருப்பவர்களுக்கு கார்த்திக் யார் என்று தெரியாது. இதனால், ஒரு ஆளை ஏற்பாடு செய்து கார்த்திக் போல் நடித்து ஆசிரமத்தில் இருப்பவர்களை நம்ப வைத்து தீபாவை கடத்த திட்டமிடுகிறாள். அவனும் ஆசிரமத்திற்கு வந்து கார்த்திக் போல் நடித்து எல்லாரையும் நம்ப வைக்க முயற்சி செய்ய அவன் ஓவர் ஆக்டிங் செய்ய ரூபாஸ்ரீ பதறுகிறாள். இருந்தாலும் அவன் கார்த்திக் போல் நடித்து அனைவரையும் நம்ப வைத்தாலும் கடைசி நேரத்தில், அங்கு வரும் ஷக்தி இது கார்த்திக் இல்லை என்பதை கண்டுபிடிக்க ரூபாஸ்ரீ அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள், பிறகு ஆசிரமத்தில் இருந்து கச்சேரிக்கு அனைவரும் கிளம்ப தயாராகுகின்றனர்.

zee tamil karthigai deepam

முருகன் சிலை உடைந்தது: அடுத்து அபிராமி வீட்டில் எல்லாரும் கச்சேரிக்கு கிளம்ப மீனாட்சி, தீபா வணங்கும் முருகன் சிலையையும் எடுத்து செல்லலாம் என்று சொல்லி பூஜை செய்து எடுத்து வர எதிர்பாராத விதமாக அந்த சிலை உடைய அனைவரும் பதற்றம் அடைகின்றனர். இருந்தாலும் எதுவும் தப்பாக நடக்காது என்ற நம்பிக்கையுடன் கிளம்பி வருகின்றனர், இங்கே ரூபாஸ்ரீ ஐஸ்வர்யாவை சந்தித்து திட்டம் தோல்வியில் முடிந்ததை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X