என் வாழ்க்கையை கெடுத்ததே தீபா தான்.. இவளை கொல்லாமல் விட மாட்டேன்..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: சனிக்கிழமை எபிசோடில், வேனில் கச்சேரி நடக்கும் இடத்திற்கு சக்தி, தீபா மற்றும் ஆசிரமக் குழந்தைகள் சென்று கொண்டு இருக்க, வழியில் வேன் பழுதாகி நின்று விடுகிறது. இதனால், பாதுகாப்புக்காக அனைவரும், பக்கத்தில் இருக்கும் கோவிலில் இருக்கின்றனர்.

மறுபக்கம் போலீசிலில் இருந்து தப்பித்த ஐஸ்வர்யாவை, நர்ஸ் சக்தி வந்த வேன் பழுதாகி இருப்பதைப் பார்த்துவிட்டு, அவ்வளவு சீக்கிரம், சக்தி குழந்தைகளை அழைத்துக்கொண்டு எங்கேயும் சென்று இருக்க முடியாது என்று, அந்த இடத்தை சுத்திப்பார்க்க அருகில் ஒரு கோவில் இருப்பதை பார்த்துவிட்டு ஐஸ்வர்யா கோவிலுக்கு வருகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ஐஸ்வர்யாவை தேடி வந்த போலீசை, கோவிலுக்குள் நுழைந்து அவரைத் தேட ஐஸ்வர்யா ஓர் இடத்தில் ஒளிந்து கொள்கிறாள். ஒரு கட்டத்தில் போலீஸ் ஐஸ்வர்யா இங்கே இல்லை என்று நினைத்துவிட்டு கோவிலை விட்டு வெளியேறியே சென்று விடுகின்றனர். இதன் பின் வெளியே வரும் ஐஸ்வர்யா, மீண்டும் தீபாவை தேடத் தொடங்க அப்போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த சக்தி நர்ஸ், ஐஸ்வர்யா மீது மோதுகிறாள். சக்தியை பார்த்த ஐஸ்வர்யா நீயா? நீ இங்கதான் இருக்கியா, அப்போ தீபாவும் இங்கதான் இருக்கணும் என்று துப்பாக்கியை எடுத்து மிரட்ட சக்தி, துப்பாக்கியை தள்ளிவிட்டுவிட்டு ஓடி,தீபா இருக்கும் இடத்திற்கு வந்துவிடுகிறாள்.

கொல்லாமல் விட மாட்டேன்: அப்போது அங்கு இருக்கும் சிஸ்டரிடம் விஷயத்தை சொல்லி, ஐஸ்வர்யா இங்கேயும் வந்துவிட்டாள் என்று சொல்லிக்கொண்டு இருக்க, ஐஸ்வர்யா அந்த இடத்திற்கு வந்துவிடுகிறாள். அப்போது, ஐஸ்வர்யா, என் வாழ்க்கை இப்படி ஆனதற்கு காரணம் இந்த தீபா தான், இவளை கொன்றால் தான் எனக்கு நிம்மதி என்று தீபாவை சுட வருகிறாள். அப்போது, சக்தி தடுத்துவிட, ஐஸ்வர்யாவுக்கும் சக்திக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. அந்த நேரம் பார்த்து சிஸ்டர் தீபாவை பத்திரமாக வேனுக்கு அழைத்து சென்றுவிடுகிறார்.

சக்தி நர்ஸ், கட்டையால் ஐஸ்வர்யா கையில் மீது அடிக்க கையில் இருந்த துப்பாக்கி பறந்து போய் பாம்பு புற்றுக்குள் விழுகிறது. ஐஸ்வர்யா வலியால் திணறும் நேரம் பார்த்து சக்தியும் ஓடி வந்து வேனில் ஏற அனைவரும் தப்பித்து விடுகின்றனர்.

போலீசுக்கு தெரிந்த உண்மை: மறுபக்கம், கார்த்திக் ஸ்டேஷனில் இருக்க இன்ஸ்பெக்டர் சரவணன் நடந்தது என்ன என ஆசிரமத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய ரூபஸ்ரீ தான் போதைப் பொருளை காரில் வைத்தது தெரிய வருகிறது. அந்த ஆதாரங்களை வைத்து கார்த்திக்கை வெளியே கொண்டு வர முயற்சிகள் நடக்க மறுப்பக்கம் அபிராமியின் குடும்பத்தார் கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்து தீபாவிற்காக காத்திருக்கின்றனர். மறுபக்கம் கோவில் புற்றுக்குள் விழுந்த துப்பாக்கியை எடுக்க ஐஸ்வர்யா முயற்சி செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X