மரத்தில் மோதிய வேன்.. உயிர் தப்பிய தீபா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், கார்த்திக் ஸ்டேஷனில் இருக்க இன்ஸ்பெக்டர் சரவணன் நடந்தது என்ன என ஆசிரமத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய, அதில், ரூபஸ்ரீ தான் போதைப் பொருளை காரில் வைத்தது தெரிய வருகிறது. அந்த ஆதாரங்களை வைத்து கார்த்திக்கை வெளியே கொண்டு வர முயற்சி செய்கிறார் இன்ஸ்பெக்டர் சரவணன். மறுபக்கம் கோவில் புற்றுக்குள் விழுந்த துப்பாக்கியை எடுக்க ஐஸ்வர்யா பாம்பு புற்றுக்குள் கையை விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்று இன்று பார்க்கலாம்.
கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரூபஸ்ரீயை போதை பொருளை திருடியதற்காக சரவணன் அவளை கைது செய்து அழைத்து வருகிறார். அப்போது ரூபஸ்ரீ, தேவையில்லாமல் என் மீது பழிபோடாதீங்க என்று சொல்லி எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இதற்கு ஆதாரம் இருக்கா என்ற கேட்கிறாள். உடனே ஆதாரமா இங்க பாருங்க என்று சிசிடிவி ஆதாரத்தை காட்ட ரூபஸ்ரீ பதறிப்போய், சார் சார் என்னை விட்டுவிடுங்க எனக்கு எதுவும் தெரியாது, எல்லாம் ஐஸ்வர்யா சொன்னதால தான் செய்தேன் என்று சொல்லி கதறுகிறாள்.

மரத்தில் மோதிய வேன்: மற்றொரு பக்கம், தீபாவுடன் சக்தி நர்ஸ் மற்றும் ஆசிரமத்திற்கு உள்ளவர்கள் அனைவரும் வந்து கொண்டிருக்க வேன் திடீரென பிரேக் பிடிக்காமல் போகிறது. டிரைவர் பிரேக் பிடிக்கவில்லை என்று சொல்ல உள்ளே இருந்த அனைவரும் பதற்றம் அடைகின்றனர். இதையடுத்து,வேன் தடுமாறி கட்டுப்பாடு இல்லாமல் ஒரு இடத்தில் மோதி நிற்க அனைவரும் உயிர் தப்புகின்றனர்.

சரவணனுக்கு நன்றி: போலீஸ் கஸ்டடியில் இருந்து வெளியே வந்த கார்த்திக் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு நன்றி சொல்லி தீபாவை எப்படியாவது பாட வைக்க வேண்டும் என சொல்கிறான். சக்தி நர்ஸ் தீபாவை எப்படியாவது கூட்டிட்டு வருவாங்க அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு என்றும் சொல்கிறான். இப்படி இருவரும் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் அந்த வழியாக வந்த ஐஸ்வர்யா, கார்த்திக்கை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். கார்த்திக்கின் கண்ணில் படாமல் எஸ்கேப் ஆக முயற்சி செய்கிறாள்.

மாறுவேஷம் போடும் ஐஸ்வர்யா: ஆனால், கார்த்திக் ஐஸ்வர்யாவை பார்த்துவிட்டு எல்லா பிரச்சனைக்கும் காரணம் ஐஸ்வர்யா தான். இவளை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என துரத்துகிறான். மறுபடியும் கார்த்திக்கிடம் சிக்கினால், அவ்வளவு தான், மாறுவேஷம் போடும் கடைக்கு என்று, யாருமே கண்டுபிடிக்க முடியாத படி ஒரு வேஷத்தை போடுகிறாள் ஐஸ்வர்யா இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











