கடவுளே மருமகளை கண்ணில் காட்டு.. கண் கலங்கி வேண்டும் அபிராமி.. கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், சரஸ்வதி சேவா நிகழ்ச்சியில் பாட ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்காக நோட்டீஸ், கட் போடு, போஸ்டர் என அனைத்தும் ஒட்டப்பட்டு வருகிறது. தனது மகள் தீபா கிடைக்க வேண்டும் என தர்மலிங்கம் மற்றும் அபிராமி என ஒட்டுமொத்த குடும்பமே ரோடு ரோடா போஸ்டர் ஒட்டி வருகிறார்.
ஆனால், இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா, தீபா கிடைக்கவே கூடாது, தீபா கிடைத்தால், எல்லா உண்மையும் வெளியில் வந்துவிடும், அப்புறம் நாம ஜெயிலுக்கு போக வேண்டியது தான் என, அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என துங்காவுடன் சேர்ந்து திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோடில், அருண் மற்றும் ஆனந்த் இருவரும் பொதுமக்கள் அனைவரும் தெருத்தெருவாக நோட்டீஸ் கொடுத்துக்கொண்டு வரும் போது, தீபா இருக்கும் ஆசிரமத்தை பார்த்த ஆனந்த், இந்த ஆசிரமத்தில் நோட்டீஸ் கொடுக்கலாம், அங்கு இருப்பவர்களக்கு தீபா குறித்து விவரம் கிடைக்க வாய்ப்பு இருக்கு என்று உள்ளே சென்று, இங்கு விளையாடிக்கொண்டு இருக்கும் குழந்தைகள் மற்றும் வேலை ஆட்களிடம் நோட்டீஸ் கொடுக்கிறான்.
ஐஸ்வர்யா செய்த வேலை: மற்றொரு பக்கம் வீட்டில்,அபிராமி பூஜை அறையில் அமர்ந்து கொண்டு, கடவுளே நான் மருமகளை என் மகன் கண்ணில் காட்டு என்று சொல்லிக்கொண்டு இருக்கிறான். இதைப்பார்த்த ஐஸ்வர்யா, துங்காவிற்கு போன் செய்து நீங்க, தீபாவை தேடுற மாதிரி தெரிய, எங்க எல்லாரும் அவளை தேடிக்கிட்டு இருக்காங்க, நீங்க கண்டுபிடிக்கவில்லை என்றால், எங்க வீட்டில் இருப்பவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் அப்புறம்,உங்களுக்கு கீதா கிடைக்க மாட்டாள் என்று சொல்ல, துங்கா அப்படி நடக்க விடமாட்டா என்று தீபாவை தேடி கிளப்புகிறான்
நோட்டீசை பார்த்த சக்தி: இதையடுத்து, ஆசிரமத்தில் ஆனந்த் கொடுத்த நோட்டீஸ் பறந்து போய் தீபம் மற்றும் சக்தி இருக்கும் ரூமுக்குள் விழ, சக்தி அந்த நோட்டீசை பார்த்து விடுகிறாள். தீபாவை கண்டுபிடிக்க கார்த்திக் செய்த ஏற்பாடு தான் இது என வெளியே ஓடிவந்து பார்க்க அதற்குள் ஆனந்த் அங்கிருந்து கிளம்பி விடுகிறான். இதை வைத்து தீபா குறித்து கார்த்திக் சாருக்கு தகவல் கொடுக்கலாம் என முடிவெடுக்கும் சக்தி மேனேஜரிடம் கார்த்திக் நம்பர் குறித்து விசாரிக்க ஏற்கனவே துங்கா, அவரை மிரட்டி, யாராவது கார்த்திக் நம்பர் கேட்டா என்னுடைய நம்பர் தான் கொடுக்க சொல்லி மிரட்டி வழிக்கு கொண்டு வந்த விஷயம் தெரிய வருகிறது.
அடுத்து சத்தி வெளியில் முருகன் வீதி உலா வர சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க திடீரென துங்கா அங்கு வந்து நிற்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











