பூட்டப்பட்டு கிடக்கும் கோவில்.. பஞ்சத்தில் வாடும் கிராமம்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் கடந்த சனிக்கிழமை தீபாவின் மறைவுடன் முதல் சீசன் முடிவுக்கு வந்த நிலையில் புதிய கதைக்களத்துடன், கார்த்திகை தீபம் இரண்டாவது சீசன் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் சீசன் 2: இன்றைய எபிசோடில், ஒரு ஊரில் பெரிய அரண்மனை வீடு காட்டப்படுகிறது. இந்த ஊரில் காலம் காலமாக கோவில் ஒன்று பூட்டப்பட்டு இருப்பதால் மழை இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் கோவிலை திறக்க வேண்டும் என ஊரின் பெரிய மனுஷனான ராஜா சேதுபதியிடம் முறையிட ஊர் மக்கள் ஒன்று கூடுகின்றனர். ராஜசேதுபதி பூஜை அறையில் சாமியை வணங்கி கொண்டிருக்கிறார். அப்போது பாட்டி பரமேஸ்வரி இடம் ஒரு பெண்மணி யாரோ ஒருவர் பெரிய சம்பட்டியை எடுத்து கோவில் பூட்டை உடைத்து கோவிலை திறக்க கோவிலில் இருந்து ஒளி வருவது போல கனவு கண்டதாக சொல்ல பரமேஸ்வரி பாட்டி கோவிலை திறக்க முடிவெடுக்கிறார்.

zee tamil karthigai deepam season2 2

வேட்டி சட்டையில் கார்த்திக்: இதைத்தொடர்ந்து எல்லோரும் கோவிலை திறப்பதற்காக கோவில் அருகே ஒன்றுகூட விருமன் என்பவன் உங்க இஷ்டத்துக்கு எப்படி கோவிலை திறக்க முடியும், மூட முடியும் இது என்ன உங்க வீட்டு சொத்தா இல்ல உங்க வீட்டு பீரோவா என கேள்வி எழுப்பி பிரச்சனை செய்கிறான். உங்க பையன் வந்தா தான் கோவிலை முறையா திறக்க முடியும் என சொல்கிறான். இதனால் ராஜசேதுபதி கோவிலை திறக்க முடியாமல் திரும்ப ஒருவன் பெரிய சம்பட்டி எடுத்து, பூட்டை அடித்து உடைத்து கோவிலை திறக்கிறான்.

இப்படி கோவிலை திறப்பது கார்த்திக் தான் என்பது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? கார்த்திக்கும் இந்த குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்? கார்த்தியின் முடிவால் அடுத்து நடக்கப் போவது என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X