திமிர் பிடித்த மாமியார்.. ரஜினி நடித்த மாப்பிள்ளை கதையா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: கார்த்திக் தாத்தா ராஜசேதுபதி, கோயிலை திறக்க ஊர் மக்கள் ஒன்று கூடுகின்றனர். இப்போது அங்கு வரும் விருமன், உங்க இஷ்டத்துக்கு எப்படி கோவிலை திறக்க முடியும். உங்க பையன் வந்தா தான் கோவிலை முறையாக திறக்க முடியும் என சொல்கிறான். இதனால் ராஜசேதுபதி கோவிலை திறக்க முடியாமல் இருக்க அப்போது அங்குவரும் கார்த்திக், கோவில் பூட்டை உடைத்து கோவிலை திறக்க அங்கு இருப்பவர்கள் சண்டை போடுகின்றனர்.
அவர்கள் அனைவரையும் கார்த்திக் அடித்து விட்டு, கோவிலை திறந்து பூஜை செய்கிறான். கார்த்திக் கோவிலை திறந்து சிவலிங்கத்தின் மீது தண்ணீரை ஊற்றியதும் மழை கொட்ட தொடங்கியதும் மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், கார்த்திக், மாமாவிற்கும் நமக்கும் எப்படி என்ன பிரச்சனை என்று கேட்க, ராஜசேதுபதி மாமாவால எந்த பிரச்சனையும் இல்ல, உன் அத்தை தான், சாமுண்டீஸ்வரி அதுக்கு விட மாட்டா , அவளுக்கு ஆம்பளைங்க என்றாலே பிடிக்காது என்று சொல்கிறார். பாவம் உன் மாமன் ராஜராஜன் மகள்களுக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருக்கான் என்று சொல்லி வருத்தப்படுகிறார்.
திமிர் பிடித்த சாமுண்டீஸ்வரி: இதையடுத்து, கார்த்திக், நீங்க கவலைப்படாதீங்க என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு அதை வெச்சி அத்தை, மாமாவை இந்த வீட்டுக்கு நிச்சயம் கூட்டிக்கொண்டுவருவேன் என்று சொல்லிவிட்டு, அத்தையின் ஊருக்கு போகிறான். தாத்தா அத்தைய பத்தி சொல்லிட்டாரு, இருந்தாலும் நாமும் அத்தையை பார்க்கலாம் என்று நடந்து போய் கொண்டு இருக்க, ஊரில் திருவிழா நடக்கிறது.அப்போது, அத்தை சாமுண்டீஸ்வரிக்கு முதல் மரியாதை கொடுக்கப்படுவதை பார்த்து, மாமா டம்மி என்பதை புரிந்து கொள்கிறான்.
கார்த்திக்கின் திட்டம்: இதையடுத்து, அங்கு ஒருவனுக்கு உதவி செய்ய அவன் நண்பனாகி விடுகிறான். இதையடுத்து, அவனிடம், வேலை தேடி இந்த ஊருக்கு வந்தேன் என்று பொய் சொல்லி, இந்த ஊரில் தங்க ஒரு வீடு வேண்டும் என்று கேட்க, நீ எனக்கு உதவி செய்து இருக்க, உனக்கு இந்த உதவிக்கூடவா செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டு கார்த்திக்கிற்கு வீடு வாடகைக்கு பிடித்து கொடுக்கிறான்.
இதையடுத்து, இருவரும் அந்த ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு செல்கின்றனர். அப்போது சாமுண்டீஸ்வரிக்கு அனைவரும் மரியாதை கொடுப்பதைப் பார்த்துவிட்டு, கார்த்திக் எதுவுமே தெரியாதது போல, சாமுண்டீஸ்வரி பற்றி விசாரிக்க, அந்த நண்பன் இவங்க தான் இந்த ஊரிலேயே பெரிய ஆள், இவங்களுக்கு நான்கு பெண்கள், இவங்களுக்கு ஆம்பளைங்களே பிடிக்காது என்று சொல்ல அனைத்தையும் கேட்டுக்கொள்கிறான். இப்படியான நிலையில், கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
ரஜினி நடித்த மாப்பிள்ளை கதையா: கார்த்திகை தீபம் சீசன் 2 திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டு எபிசோடை பார்த்த ரசிகர்கள் ரஜினி, தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் போல திமிர் பிடித்த அத்தையை அடக்குவதுதான் கதையா என்றும், ஏற்கனவே அந்த படம் வேற வேற நடிகர்கள் நடித்து பார்த்துவிட்டோமே என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











