தீபாவாக நடிக்கும் கீதா யார்? கார்த்திக்கிற்கு உண்மை தெரிய வருமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், சரவணன் ஸ்டேஷனுக்கு வரும் ஆந்திரா போலீசார், கீதா என்ற பெண் எங்களிடம் இருந்து தப்பி சென்றுவிட்டாள், இந்த ஏரியாவில் தான் தப்பி ஓடினாள், நீங்க அவங்களை பிடிக்க உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல, சரவணன் கண்டிப்பாக செய்கிறேன் என்று சொல்கிறான். அந்த போலீஸ் ரிப்போர்ட்டில் கீதாவின் போட்டோ இருக்கிறது.
மறுபக்கம், கீதா ரூமுக்குள் இருக்க கார்த்திக் உள்ளே வர எதுக்கு, போலீஸ் வீட்டுக்கு வந்து விசாரணைக்கு கூப்பிடுறாங்க என்று கோபப்படுகிறாள். அதற்கு கார்த்திக், சரவணன் என்னுடைய பிரண்டு தான் இது வெறும் ஃபார்மாலிட்டி தான் வாங்க போயிட்டு வந்துடலாம் என்று சொல்லி கூப்பிடுகிறான். ஆனால், கீதா நான் வரமாட்டேன் என்று கோவப்படுகிறாள். அப்படியான நிலையில் இன்று என்ன நடக்கோகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக், கீதாவை சமாதானப்படுத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வருகிறான். அப்போது, கீதா நான் வரமாட்டேன் நீங்க போங்க என்று சொல்ல, விருப்பம் இருந்தா வாங்க என்று சொல்லிவிட்டு ஸ்டேனுக்குள் வருகிறான். அந்த நேரம் பார்த்து, போலீஸ் ஸ்டேஷனில் கர்நாடகா போலீஸ், கீதா குறித்து விசாரிக்கின்றனர். ஏதாவது தகவல் கிடைத்ததா என்று கேட்க, சரவணன் இங்கே இருக்கும் ஹாஸ்டல், ஓட்டல் என எல்லா இடத்திலேயேயும் விசாரிச்சாச்சு கீதா கிடைக்கவில்லை, வேறு ஏதாவது தகவல் கிடைத்தால் சொல்லுகிறேன் என்று சொல்லி அந்த போலீசை அனுப்பிவைக்கிறார்.
போட்டோவை திருடிய கீதா: இதை தொடர்ந்து கர்நாடகா போலீஸ் சரவணனிடம் பேசி முடித்து விட்டு வெளியே வர காரில் இருக்கும் கீதாவை பார்த்து விடுவார்களா என்ற பில்டப் எகுறுகிறது. ஆனால், போலீசார் கீதாவை கவனிக்காமல் சென்று விடுகின்றனர். அதன் பிறகு கீதா யோசித்துவிட்டு ஸ்டேஷனுக்குள் நுழைகின்றாள். அப்போது, சரவணன், கீதாவிடம் மலையில் என்ன நடந்தது, ரியாவை சுட்டது யார், ரம்யாக்கு என்ன ஆச்சு என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, பயந்து போன கீதா, சார் எனக்கு அங்க என்ன நடந்தது என்றே தெரியாது. நான் காரிலேயே தூங்கிவிட்டேன். மேலும், தலையில் அடிபட்டதால் எதுவும் நினைவில் இல்லை என்று சமாளிக்கிறாள்.
பத்து நாளில் கல்யாணம்: அந்த நேரத்தில் அங்கு டேபிளில் தன்னுடைய போட்டோ இருப்பதை பார்த்த கீதா யாருக்கும் தெரியாமல் அதை எடுத்து விடுகிறாள். பிறகு வீட்டிற்கு வந்ததும் அந்த போட்டோவை ஒரு புக்கில் வைத்து பீரோ மீது வைக்க, அது காற்றில் பறந்து கீழே விழுந்து விடுகிறது. அந்த நேரம், அபிராமி ஜோசியரை வீட்டிற்கு அழைத்து ஒரு நல்ல நாள் குறிக்க சொல்ல அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
கார்த்திக் அபிராமியிடம் இப்போ எதுக்குமா, இதெல்லாம் தீபாவிற்கு இப்போ உடம்பு சரியில்லை. இதனால், கல்யாணத்தை பிறகு செய்யலாம் என்று சொல்ல, அபிராமி, ஐய்யர் வீட்டுக்கு வந்துவிட்டார், இன்னும் பத்து நாள் கழித்து திருமணத்திற்கு தேதி குறிக்கலாம் என்று சொல்ல. கார்த்திக் பதில் பேச முடியாமல் நிற்க கீதா கடுப்பாகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











