கீதா பற்றி தெரியவந்த உண்மை.. அடுத்து நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், ஸ்டேஷனில் இருந்த போட்டோவை கீதா யாருக்கும் தெரியாமல் எடுத்து விடுகிறாள். பிறகு வீட்டிற்கு வந்ததும் அந்த போட்டோவை ஒரு புக்கில் வைத்து பீரோ மீது வைக்க, அது காற்றில் பறந்து கீழே விழுந்து விடுகிறது.
அபிராமி ஜோசியரை வீட்டிற்கு அழைத்து ஒரு நல்ல நாள் குறிக்க சொல்ல கீதா ஷாக் ஆகிறாள். கார்த்திக் அபிராமியிடம் இப்போ எதுக்குமா, இதெல்லாம் தீபாவிற்கு இப்போ உடம்பு சரியில்லை. இதனால், கல்யாணத்தை பிறகு செய்யலாம் என்று சொல்ல, அபிராமி, ஐய்யர் வீட்டுக்கு வந்துவிட்டார், இன்னும் பத்து நாள் கழித்து திருமணத்திற்கு தேதி குறிக்கலாம் என்று சொல்ல. கார்த்திக் பதில் பேச முடியாமல் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் கார்த்திக் ரூமுக்கு வர, கடுப்பான கீதா, உங்க அம்மா கல்யாணத்திற்கு தேதி குறிச்சி இருக்காங்க நீங்க எதுவுமே சொல்லாமல் அமைதியா இருந்தா என்ன அர்த்தம் என்று கேட்டு கத்துகிறாள். ஏன் கத்துறீங்க அமைதியா இருங்க, அம்மா நாளைக்கே கல்யாணம் பண்ண வேண்டும் என்று சொன்னாங்க நான் தான் பத்து நாள் கழித்து கல்யாணத்தை வெச்சிக்கலாம் என்று சொன்னேன்.
கல்யாணமே எனக்கு பிடிக்காது: அதுக்குள்ள தீபாவை கண்டுபிடித்துவிடுவேன் என்று சொல்கிறான். அய்யோ எனக்கு இந்த கல்யாணம், குழந்தை, குட்டி என்ற எந்த செட்டிமென்டும் இல்ல. தயவு செய்து என்ன கஷ்டப்படுத்தாதீங்க, அப்படி தீபா கிடைக்கவில்லை என்றால் நான் இந்த வீட்டை விட்டு போய்விடுவேன் என்கிறாள். பத்து நாளில் தீபா கிடைத்துவிடுவாள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு, அதற்குள் தீபா கிடைக்கவில்லை என்றால், நீங்க தாராளமாக போகலாம் என்று சொல்லிவிட்டு, வெளியில் கிளம்பி விடுகிறான் கார்த்திக்.
தெரியாமல் கல்யாணம்: இதைத்தொடர்ந்து, அபிராமி, மீனாட்சியை அழைத்து, தீபாவிற்கும் கார்த்திக்கும் வெள்ளிக்கிழமை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும். இரண்டு பேரையும் கோவிலுக்கு அழைத்து சென்று தாலி கட்ட சொல்ல வேண்டும். என் உயிருக்கு ஆபத்து என்பதால், கார்த்திக் கல்யாணத்திற்கு பயப்படுகிறான். இதனால், அவர்களுக்கு தெரியாமல் கல்யாணம் பண்ண வேண்டும், இதை நீ மைதிலியிடம் சொல்லிவிடாதே என்று சொல்ல அவளும் சரி என்கிறாள்.
கீதா பற்றிய உண்மை தெரிந்தது: மறுபக்கம் போலீஸ் ஸ்டேஷனில் சரவணன், பெங்களுர் போலீஸ் கொடுத்த ரிப்போர்ட் பைலைப் பார்த்துக்கொண்டு இருக்க, அதில் போட்டோ இல்லாததால், கான்ஸ்டபிளிடம் விசாரிக்கிறார். உடனே அவர் சார் போட்டோ இருந்துதே என்று சொல்ல, சரி மீண்டும் போட்டோவை அனுப்ப சொல்லுங்க என்று சொல்ல, அவரும் பெங்களுர் போலீசிடம் பேசி போட்டோவை வாங்க. அதைப்பார்த்த சரவணன் அதிர்ச்சி அடைகிறான்.


Click it and Unblock the Notifications











