தீபாவை துரத்தும் புதிய வில்லன்.. கார்த்திக் தீபா மீண்டும் சேருவார்களா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், கீதா குறித்து உண்மை தெரிந்த சரவணன், கார்த்திக்கை தனியாக சந்தித்து உன் வீட்டிற்கு வந்திருப்பது கீதா, மினிஸ்டரோட தம்பியை கொன்னுட்டு உன் வீட்டிற்குள் அடைக்கலம் புகுந்து இருக்கா என்று சொல்ல கார்த்திக் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறான். பிறகு வீட்டிற்கு வந்த கார்த்திக் கீதாவிடம் நீங்க யாருனு எனக்கு தெரிந்து போச்சு என்று சொல்கிறான்.
ஒரு கொலையை பண்ணிட்டு இங்க தப்பித்து வந்திருக்கீங்க என்று சொல்ல கீதா எல்லா உண்மையும் தெரிந்து போச்சா இங்க இருந்து தப்பித்து போறேன் என்று சொல்லி கிளம்ப கார்த்திக் உங்க பக்கம் நியாயம் என்ன? ஏன் இப்படி பண்ணீங்கன்னு எனக்கு தெரியல.. ஆனால் உங்களுக்கு நான் உதவுறேன் என்று சொல்கிறான்.இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், தீபாவை பரிசோதனை செய்த டாக்டர், இந்த பெண்ணோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, உடம்பு புல்லா அடிபட்டு இருக்கு, சென்னையில் கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலில் கொண்டு போய் சேர்க்க சொல்கிறார் டாக்டர். அப்போது அந்த பெண், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொல்ல, டாக்டர் நான் எழுதி தருகிறேன், அரசு மருத்துவமனைதான் அவ்வளவா செலவு ஆகாது என்று சொல்லி எஎழுதி கொடுக்க, அந்த பெண்மணியும் தீபாவை ஹாஸ்பிடலில் சேர்க்க முடிவெடுக்கிறாள். தீபா கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி சாமியை வேண்டி கொண்டு பூஜை அறையில் வைத்து விடுகிறாள்.
கவலைப்பட வேண்டாம்: இதை தொடர்ந்து வீட்டில் கார்த்திக் தீபாவின் போட்டோவைப் பார்த்துக்கொண்டு அவளை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்க, தூக்கத்தில் இருந்து எழுந்த கீதா என்ன கார்த்திக், தீபாவை மிஸ் பண்றீங்களா என்று கேட்க அவனும் ஆமாம் தீபா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை, அவளுக்கு என்ன ஆச்சு என்று தெரிவில்லை என்று சொல்லி பீல் பண்ணுகிறான். அப்போது கீதா, நான் ஒன்னு கேட்கிறேன். மலையில் இருந்து விழுந்த தீபா எப்படிஉயிரோடு இருப்பா என்று நம்புறீங்க என்று கேட்கிறாள். அப்போது கார்த்திக், நீங்க லவ் பண்ணி இருக்கீங்களா? லவ் பண்ணி இருந்தா இப்படி சொல்லி இருக்க மாட்டீங்க, அவ எங்கையோ ஒரு இடத்தில் உயிரோடு தான் இருக்கா என் உள் மனசு சொல்லுது நிச்சயம் அவள் உயிரோடு வருவாள் என்று கண் கலங்குகிறான்.
தீபாவை துரத்தும் புதிய வில்லன்: இதையடுத்து மறுபக்கம், கர்நாடகாவில் மிஸ்டர் தூங்கா என்பவர் காட்டப்படுகிறார். அவர் போலீசை கூப்பிட்டு ஒரு பெண்ணை போய் தப்பிக்க விட்டு இருக்கீங்க, எனக்கு அந்த கீதா கிடைத்தாகணும் என்று சத்தம் போட போலீசார், கீதா சென்னையை விட்டு எங்கேயும் போய் இருக்க முடியாது, கூடிய சீக்கிரம் கண்டுபிடித்து விடுவோம் என்று சொல்கிறாள்.
உங்களை நம்புனா வேலைக்கு ஆகாது என்று சொல்லிவிட்டு, தூங்கா சென்னை கிளம்பி வருகிறான். ஒரு பக்கம் தீபாவை அந்த பெண்மணி ஆட்டோவில் சென்னைக்கு அழைத்து வர.. இன்னொரு பக்கம் கார்த்திக் தனது போலீஸ் நண்பன் சரவணனுடன் தீபாவை தேடி வர வெளியே கிளம்பி வருகிறான், மூவரும் ஒரே சிக்னலில் நிற்கின்றனர், ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளவில்லை. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











