பேராபத்தில் தீபா.. கார்த்திக்கிற்கு கிடைத்த தீபாவின் தாலி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
சென்னை: நேற்றைய எபிசோடில், தீபாவை பரிசோதனை செய்த டாக்டர், உடம்பு புல்லா அடிபட்டு இருக்கு, ஹாஸ்பிடலில் கொண்டு போய் சேர்க்க சொல்லி எழுதி கொடுக்க, அந்த பெண்மணியும் தீபாவை ஹாஸ்பிடலில் சேர்க்க முடிவெடுத்து ஆட்டோவில் அழைத்துக்கொண்டு வருகிறாள். மறுபக்கம், கார்த்திக், நண்பன் போலீசுடன் தீபாவை தேடி அலைகிறான். அடுத்து, கீதாவை தேடி, தூங்கா என்பவர் சென்னைக்கு கிளம்பி வருகிறான். மூவரும் ஒரே சிக்னலில் நிற்கின்றனர், ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளவில்லை. இப்படியான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்று பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் சீரியல்: இன்றைய எபிசோடில், சிக்னலில் மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் ஆளுக்கு ஒரு திசையாக கிளம்பி விடுகின்றனர். இதையடுத்து தீபாவை கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்து விஷயத்தை சொல்ல போலீஸ் கேஸ் என்று சொல்ல அந்த பெண்மணி எனக்கு அவ்வளவு விவரம் எல்லாம் தெரியாது. நீங்களே கொஞ்சம் பார்த்துக்கோங்க என்று, தீபாவை விட்டு விட்டு கிளம்பி வருகிறாள். இதை தொடர்ந்து ஷக்தி என்ற அன்பான நர்ஸ் அறிமுகமாகிறார். ஊசி போட்டு கொள்ள அழும் குழந்தைக்கு பாசமாக பேசி ஊசி போட்டு விடுகிறாள்.

கடவுளிடம் பிரார்த்தனை: மைதிலி, மீனாட்சியுடன் இதே ஹாஸ்பிடலுக்கு வர அப்போது ஊசி போட வந்த ஷக்தி என்ற நர்ஸை ஒரு பெண் மலை உச்சியில் இருந்து விழுந்து விட்டதாக சொல்லி கொண்டிருக்க மீனாட்சி பேரை கேட்க மைதிலி அதெல்லாம் நமக்கு எதுக்கு என தடுத்து விடுகிறாள். பிறகு இவர்கள் கோவிலுக்கு வர மீனாட்சி அந்த பெண்ணுக்காக கடவுளிடம் வேண்டி கொண்டு பிரசாதத்தை எடுத்து கொண்டு மீண்டும் ஹாஸ்பிடலுக்கு வருகிறாள். நர்ஸிடம் அனுமதி கேட்டு அந்த பெண்ணுக்கு ( தீபா ) வைத்து விட icu-ல் நுழைய போகும் சமயத்தில் டாக்டர் அதுக்கெல்லாம் அனுமதிக்க முடியாது என்று தடுத்து நிறுத்தி விடுகிறார்.
தேடி அலையும் கார்த்திக்: இன்னொரு பக்கம் துங்கா ஒரு ரெஸ்டாரெண்ட்டுக்கு வந்து ரவுடிகளை வர வைத்து கீதா போட்டோவை காட்டி சல்லடை போட்டு தேடிக்கொண்டு இருக்கிறான். மறுபக்கம் கார்த்திக், தீபா காணாமல் போன இடத்திற்கு வந்து அங்கு இருப்பவர்களிடம் விசாரித்துக்கொண்டு இருக்கிறான். அப்போது, சரவணன், கார்த்திக், தீபா இங்கு இருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்ல, இல்ல சரவணா என் உள்மனசு அவ இங்கே தான் எங்கையோ இருக்கா என்று சொல்கிறான்.
தாலியை பார்த்த கார்த்திக்: பின் அந்த ஊரில் ஒவ்வொருத்தரிடமும் தீபாவின் போட்டோவை காட்டி விசாரித்துக்கொண்டு இருக்க, தீபாவை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த பெண்ணின் கணவர், தீபாவின் தாலியை விற்க எடுத்து வருகிறான். அவனிடமும் கார்த்திக், தீபாவின் போட்டோவை காட்டி விசாரிக்க, உண்மையை சொன்னால், தாலியை வாங்கிவிடுவார் என்று நினைத்துக்கொண்டு, அப்படி யாரும் இங்கே இல்லை சார் என்று சொல்லிவிட்டு, கவலைப்படாதீங்க சார் உங்க மனைவி சீக்கிரம் கிடைப்பாங்க என்று சொல்கிறான்.
உயிரோடு இருக்கும் தீபா: இதனால், கார்த்திக் வருத்தத்தோடு திரும்ப, தீபா இங்கே தான் இருப்பது போல உள் உணர்வு சொல்ல, திடீரென அந்த நபரை திரும்பி பார்க்க, அவன் கார்த்திக் மீது தவறுதலாக மோத தாலி கீழே விழந்துவிடுகிறது. அதை கார்த்திக் பார்த்து அவனை மிரட்டி விசாரிக்க, என் பொண்டாட்டிக்கு தான் தெரியும் என்று வீட்டிற்கு அழைத்து செல்கிறான். அடுத்து அந்த பெண்மணி கார்த்திக்கிடம் தீபாவை ஹாஸ்பிடலில் அனுமதித்த விஷயத்தை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











