தீபாவை பார்க்க காதலோடு வரும் கார்த்திக்.. ரௌடியின் பிடியில் தீபா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
சென்னை: நேற்றைய எபிசோடில், கார்த்திக், சரவணனுடன் கற்பகம் வீட்டிற்கு வந்து தீபாவின் போட்டேவை காட்டி விசாரிக்கின்றனர். அப்போது, அந்த பெண் தீபாவை மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக கூற, தீபா உயிரோடு இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறான். பின், தீபாவை காப்பாற்றிய பெண்ணுக்கு பணம் கொடுத்து உதவி செய்துவிட்டு, அங்கிருந்து கிளம்பி விடுகிறான். இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில், கார்த்திக் மற்றும் சரவணன் காரில் மருத்துவமனை வந்து கொண்டு இருக்க, சரவணன், கார்த்திக் நீங்க தீபா மேல வைத்திருந்த காதல் ஜெயித்துவிட்டது. நாங்க எல்லாரும் தீபா உயிரோடு இருக்க மாட்டா என்று சொன்ன போது, நீங்க மட்டும் தான் அவ உயிரோட இருப்பா என்று சொன்னீங்க, அந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்று சொல்கிறார்.

ரௌடியிடம் சீக்கிய தீபா: மறுபக்கம் தீபா ஐசியூவில் இருக்க இந்த ஹாஸ்பிடலுக்கு வந்த ஒருவன் தீபாவை பார்த்துவிட்டு, நேற்று துங்கா அண்ணன் இந்த பெண்ணின் போட்டோவைத்தானே அனுப்பி தேடி சொன்னாரு, அவ எப்படி ஹஸ்பிட்லில் இருக்கானு தெரியலேயே, சரி நமக்கு எதுக்கு என்று சொல்லி, ரௌடி காதருக்கு போட்டோ எடுத்து அனுப்பி விடுகிறான். போட்டோவை பார்த்த ரௌடி இவ, கீதா தான், இப்ப ஹஸ்பிடலில் இருக்கிறாள் என்று துங்காவிடம் சொல்ல, அனைவரும் ஹஸ்பிடலில் வைத்து அவளை தூக்கிவிடலாம் என்று கிளம்புகின்றனர்.
ஐஸ்வர்யாவிற்கு தெரிந்த உண்மை: அதே போல, ஐஸ்வர்யாவின் தோழி ஒருத்தி மருத்துவமனைக்கு வருகிறாள். அவள், தீபா ஐசியூவில் இருப்பதை பார்த்து ஐஸ்வர்யா போன் செய்து, தீபா தலையில் அடிபட்டு மருத்துவமனையில் இருக்கிறார் என்று சொல்ல, ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள். இதையடுத்து, ரேவதி நீ அங்கேயே இரு நான் இப்போ வந்துவிடுகிறேன் என்று, ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வருகிறாள்.
கீதாவை கொன்றுவிடலாம்: அதேபோல் கீதாவை தேடி அலையும் துங்கா, ஹாஸ்பிடலுக்கு வர தீபாவை பார்த்து கீதா நினைத்து. இவ என் சொந்தக்கார பெண் தான் ரொம்ப நாளாக காணவில்லை என்று பல இடத்தில் தேடிக்கொண்டு இருக்கிறோம் என்று சொல்லி, எங்க கூட அனுப்பி வச்சிடுங்க என்று பாவமாக பேச நர்ஸ் அவர்களுடன் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்கிறாள். துங்கா தனது ஆட்களுக்கு கீதா, கிடைச்சிட்டா அவளை நம்ப இடத்துக்கு கூட்டிட்டு போய் கொன்னுடலாம் என்று பேசிக் கொண்டிருக்க இதை நர்ஸ் கேட்டுவிடுகிறாள்.
இதனால், பதறிப்போன நர்ஸ், இங்கு இருக்கும் தெரிந்த ஒருவரிடம் உதவி கேட்டு, தீபாவுக்கு பதிலாக வேறொரு பெண்ணை அவர்களுடன் ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்க முடிவு செய்கிறாள். துங்கா அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலில் இருந்து கிளம்ப கார்த்திக் ஹாஸ்பிடல் நோக்கி வர ஐஸ்வர்யாவும் இதே ஹாஸ்பிடலுக்கு வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











