ஆள் மாறாட்டம் செய்த நர்ஸ்.. மொத்தமாக ஏமாந்த ரௌடி..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், ரௌடி துங்கா ஹாஸ்பிடலுக்கு வந்து, இவங்க திடீரென காணாமல் போயிட்டாங்க, இவங்களை பல இடத்தில் தேடிக்கொண்டு இருக்கிறோம், இப்போ இங்க இருக்காங்க, இவங்களை எங்க கூட அனுப்பி வச்சிடுங்க என்று டாக்டரிடம் பாவமாக பேச, டாக்டர் சக்தி நர்சை அழைத்து அவர்களுடன் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்ய சொல்கிறார்.. துங்கா தனது ஆட்களுக்கு கீதா, கிடைச்சிட்டா அவளை நம்ம இடத்துக்கு கூட்டிட்டு போய் கொன்னுடலாம் என்று பேசிக் கொண்டிருக்க இதை நர்ஸ் கேட்டுவிடுகிறாள்.
இதனால், பதறிப்போன நர்ஸ், தீபாவுக்கு பதிலாக வேறொரு பெண்ணை அவர்களுடன் ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்க முடிவு செய்கிறாள். துங்கா அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலில் இருந்து கிளம்ப கார்த்திக் ஹாஸ்பிடல் நோக்கி வர ஐஸ்வர்யாவும் இதே ஹாஸ்பிடலுக்கு வருகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக் ஹாஸ்பிடல் வருவதை பார்த்த ஐஸ்வர்யா, அய்யோ, கார்த்திக் எதுக்கு இங்கே வரான், அவனுக்கு தீபா இங்கே இருப்பது தெரிந்துவிட்டதா என்று பயந்து ஓடி ஒளிந்துக்கொள்கிறாள். இதையடுத்து, ஐசியூவில் தீபா இல்லாததால், கார்த்திக் டாக்டரிடம் விசாரிக்க அவர், பெங்களுரில் இருந்து வந்த துங்கா என்பவர் அவரை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து சென்றுவிட்டார் என்று சொல்ல, கார்த்திக் அதிர்ச்சி அடைகிறார். இதையடுத்து சரவணன், கீதாவிற்கு வேண்டாதவன் எவனோ, தீபாவை கீதா என நினைத்து கடத்திவிட்டான் என்கிறார்.
ஆள் மாறாட்டம்: இன்னொரு பக்கம் துங்கா ஆம்புலன்சில் கீதா என நினைத்து ஒருவரை அழைத்து செல்கிறான். ஒரு கட்டத்தில் ஆம்புலன்சில் இருப்பவரின் முகத்தில் இருந்த துணி விலக, அது கீதா இல்லை என தெரிந்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு அங்கிருந்து கிளம்பி மீண்டும் ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர், அடுத்து ஹாஸ்பிடல் வந்த துங்கா, கீதா குறித்து விசாரிக்க அங்கிருந்த நர்ஸ் அதெல்லாம் தெரியாது. ஆள் மாற்றம் எப்படி நடந்தது என்று எங்களுக்கே தெரியல என்று சொல்கின்றனர்.
நர்ஸ் வீட்டுக்கு போகும் கார்த்திக்: மறுபக்கம், கார்த்திக் மற்றும் சரவணன், நர்சிடம் தீபா குறித்து விசாரிக்க அங்கிருந்த நர்ஸ், நீங்க கேட்டதும் எல்லா விஷயத்தையும் சொல்ல முடியாது சார். எதுவாக இருந்தாலும் சீப் டாக்டரிடம் பேசுங்க அல்லது போலீசுடன் வாங்க என்று சொல்ல சரவணன், நான் இன்ஸ்பெக்டர் தான் என்று சொல்லி தீபா குறித்து விசாரிக்க அவங்களை பத்தி எங்களுக்கும் தெரியல என்கிறார்.
பிறகு டியூட்டியில் இருந்த நர்ஸ் விவரங்களை சேகரித்து அவர்களது வீட்டிற்கு விசாரிக்கின்றனர், இறுதியாக நர்ஸ் ஷக்தி வீட்டிற்கு செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











