தீபாவுக்கு என்ன ஆச்சு.. மோதிரத்தை பார்த்து கதறும் கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில் மலை உச்சியில் இருந்து ரம்யா, தீபாவை துப்பாக்கியை காட்டி மிரட்டிக்கொண்டு இருக்க, தீபா, ரம்யாவின் கை பிடித்து தடுத்துக்கொண்டு இருக்கிறாள். அந்த நேரம் பார்த்து ரியா அங்கு வந்து, ரம்யா, தீபா தான் நம்ம எதிரி அவளை உயிரோடு விடாதே என்று சொல்ல, குண்டு தவறுதலாக ரியா மீதுபட அவள் உயிரிழந்து விடுகிறாள்.
இதைத்தொடர்ந்து கடுப்பான ரம்யா, உன்னால என் ரியா செத்துவிட்டாள் என்று தீபாவை மலை உச்சியில் இருந்து தள்ளிவிட முயற்சி செய்ய, தவறுதலாக மலை உச்சியில் இருந்த ரம்யா விழுந்துவிடுகிறாள். இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த ஐஸ்வர்யா, அழுதுக்கொண்டு இருக்கும் தீபாவை மலை உச்சியில் இருந்து தள்ளி விட அவளும் சரிந்து விழுகிறாள். எப்பா எத்தனை நாள் கனவு, செத்துப்போடி, இனிமே அந்த வீட்டில் நான் நிம்மதியா வாழ்வேன் என்று சொல்லிவிட்டு யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து ஓடிவிடுகிறாள் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக் தீபாவை தேடிக்கொண்டு இருக்க கார்த்திக்கின் நண்பன் போலீஸ் சரவணனிடம் இருந்து போன் வருகிறது. அதில், சரவணன் நான் அனுப்பும் லொகேஷனுக்கு உடனே வரும்படி சொல்ல கார்த்திக் அங்கு வருகிறான். அங்கு, ரியா குண்டு காயம் பட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். மேலும், அந்த இடத்தில் தீபாவின் மோதிரம் விழுந்து கிடப்பதை பார்த்து கார்த்திக் கண்கலங்குகிறான். அந்த மோதிரம் தீபாவிற்கு ரொம்ப பிடித்த மோதிரம், இது என்னிடம் இருந்தால், நீங்க என்கூட இருப்பது போல என தீபா சொன்னதை நினைத்து வருத்தப்படுகிறான்
தீபாவை காட்டில் தேடும் கார்த்திக்: இதைத்தொடர்ந்து,போலீசார் ரம்யா மற்றும் தீபாவை தேடுகின்றனர், தீபாவின் புடவை, ரம்யாவின் புடவையை கொடுத்து இங்கிருந்து விழுந்தால் பாடி எதுவும் கிடைக்காது, தீபா திரும்பி வருவது சந்தேகம் தான் என்று ஷாக் கொடுக்கின்றனர். இதனால் உடைந்து போய் கார்த்திக், இல்லை தீபா இந்த காட்டில் தான் எங்கோ இருக்கிறாள் என்று காட்டில் தீபாவை தேடி அலைகிறான். அந்த நேரம் அங்கு இருக்கும் ஒரு அகோரியிடம் கார்த்திக் விசாரிக்கிறான்.
புலம்பும் அபிராமி: இதற்கிடையில் கார்த்திக் அபிராமியை பார்க்க ஹாஸ்பிடல் வந்திருக்க அபிராமி, தீபா பெயரை மட்டுமே உச்சரிக்க டாக்டர் தீபா தான் மருந்து.. தீபா வந்தால் தான் அபிராமி கண் விழிப்பார் என்று சொல்கிறார். இதனால் அபிராமியை காப்பாற்ற கார்த்திக் அவள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்று பொய் சொல்லி சமாளிக்கிறான். இதைக்கேட்ட ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைந்து தீபா இறந்து விட்டாளா இல்லை உயிரோடுத்தான் இருக்கிறாளா என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











