கார்த்திக்- தீபா சேருவார்களா? அடுத்து நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், நர்ஸ் சக்தியும் கார்த்திக்கும் ஒரே ஓட்டலில் ஜூஸ் ஆடர் செய்து சாப்பிட்டனர். ஆனால், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. அதன் பிறகு கார்த்திக் ரெஸ்டாரன்டில் இருந்து கிளம்ப, நர்ஸ் சக்தி, கார்த்திக்கை பார்த்து விட்டு இவர் தானே, தீபாவின் கணவர் என்று ஓடிவர, அதற்குள் கார்த்திக் காரை எடுத்துகொண்டு சென்றுவிடுகிறான்.

மறுபக்கம், ஐஸ்வர்யா வீட்டில் இருப்பது தீபாவே கிடையாது கீதா என்ற உண்மையை போட்டு உடைக்க கீதாவும் ஆமாம், நான் கீதா தான் என்று ஒப்புக்கொள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்த நேரத்தில் கார்த்திக் தீபாவுடன் வீட்டுக்குள் நுழைய தீபா ஐஸ்வர்யா தான் தன்னை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டது என்ற உண்மையை உடைக்க அனைவரும் பேரதிர்ச்சி அடைகின்றனர். ஐஸ்வர்யா என்னை கைது பண்ணிடாதீங்க என்று அலறி துடிக்க அது அவளது கனவு என்று தெரிய வருகிறது. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திக் தீபம்: இன்றைய எபிசோடு, பல இடத்தில் தேடியும் தீபா கிடைக்காததால், வீட்டுக்கு வந்து சோகத்துடன் உட்கார்ந்து இருக்க, அப்போது அங்கு வரும் கீதா, என்ன கார்த்திக், தீபாவை நினைச்சி கவலையா இருக்கா, வருத்தப்படாதீங்க அவங்க நிச்சயம் கிடைப்பாங்க. எல்லாரும் தீபா உயிரோட இல்லை என்று சொன்ன போது, நீங்க மட்டும் தான் நம்புனீங்க, நிச்சயம் உங்க காதல் அவங்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்று கீதா, கார்த்திக்கிற்கு ஆறுதல் சொல்கிறாள்.

ஐஸ்வர்யா பிளான்: மறுபக்கம், ஐஸ்வர்யா, தூக்கமே வராமல் புலம்பிக்கொண்டு இருக்கிறாள். இந்த தீபா சாகாமல் உயிரோட இருக்கா, அவ உயிரோட வந்தா, நாம சாகவேண்டியது தான். கார்த்திக் அவளை கண்டுபிடிப்பதற்குள் தீபாவை நாம கண்டுபிடித்து போட்டு தள்ளிவிட வேண்டும், இல்லனா நாம ஜெயிலுக்குத் தான் போகவேண்டும் என்று அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருக்கிறாள்.

கீதா கொடுத்த ஐடியா: இதே நேரம், கார்த்திக், கீதாவிடம், எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு வேளை தீபா கிடைக்கவில்லை என்றால், நீங்க சொன்னபடியே வீட்டை விட்டு போய்டுங்க என்று சொல்லுகிறான். உடனே கீதா, என்ன கார்த்திக் இப்படி சொல்றீங்க என்னால இப்போ உங்க மனைவி தீபா பிரச்சனையில இருக்காங்க, இப்படி இருக்கும் போது நான் எப்படி போவது எல்லாம் நல்லபடியா நடக்கும் கார்த்திக், கவலைப்படாம இருங்க என்கிறாள். ஆனால், கார்த்திக் எனக்கு உங்க அண்ணி ஐஸ்வர்யா, மேல சந்தேகமா இருக்கு. எதுக்கும் , தீபா காணாமல் போன போது, ஐஸ்வர்யா எங்கே இருந்தாங்க என்று செல் போன் சிக்னலை வைத்து கண்டுபிடிங்க என்றாள் கீதா, உடனே கார்த்திக் இதுவும் நல்ல ஐடியா தான் என்கிறான்.

துங்கா அனுப்பிய ஆள்: மறுபக்கம், நர்ஸ் சக்தி வீட்டிற்கு வருகிறாள். அப்போது மயக்கத்தில் இருக்கும் தீபா, கார்த்திக் ... கார்த்திக் என்று புலம்பிக்கொண்டு இருக்க, தீபாவை பார்த்து வருத்தப்படுகிறாள். அந்த நேரம் பார்த்திக் துங்கா ஏற்பாடு செய்த நபர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று, தீபா குறித்தும் நர்ஸ் சக்தி குறித்தும் விசாரிக்கிறான். இது துங்கா அனுப்பிய ஆள் என்று தெரிந்து கொண்டு மற்றொரு நர்ஸ் எதுவும் சொல்லாமல் அவனை அந்த இடத்தில் இருந்து அனுப்பி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X