கார்த்திக்கிடம் சிக்கிய ஐஸ்வர்யா.. தீபா இருக்கும் இடம் தெரிந்ததா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோட்டில், அபிராமி கோவிலில் கார்த்திக்கிற்கும் தீபாவிற்கும் திருமணம் செய்து வைக்க நல்ல நேரம் பார்க்கிறாள். பூசாரி நாளைக்கு காலை 9 மணிக்கு நல்ல நேரம் அப்போதே திருமணத்தை செய்துவிடலாம் என்கிறார். உடனே அபிராமி, மீனாட்சியிடம் இதுபற்றி, கார்த்திக்கிடம் எதுவும் சொல்லவேண்டாம். பரிகாரம் என்று சொல்லி அழைத்து திருமணம் செய்து விடலாம் என சொல்லுகிறாள்.

மறுபக்கம், துங்கா எதிர்பாராத விதமாக ஆனந்தை சந்திக்கிறான் இருவரும் நண்பர்கள் என்பதால், ஆனந்த், துங்காவை வீட்டிற்கு அழைத்து வந்து அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறான். கடைசியாக தீபாவை கூப்பிட தீபா ரெஸட் ரூமில் இருப்பதாக பொய் சொல்லி தப்பிக்கிறாள்‌. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், எப்எம் ஸ்டேஷனுக்கு சென்று கார்த்திக்கின் வீட்டு முகவரியை வாங்கிக்கொண்டு சக்தி வீட்டுக்கு வர, அங்கு இருக்கும் ஐஸ்வர்யா, நீங்க யார் என்று கேட்க, நான் கார்த்திக்கைப் பார்த்து முக்கியமான விஷயம் ஒன்றை சொல்ல வேண்டும் என்று சொல்கிறாள். இதனால், பதறிப்போன ஐஸ்வர்யா, கார்த்திக் இப்போது வீட்டில் இல்லை. நான் அவரின் அண்ணி தான் என்னை நம்பி விஷயத்தை சொல்லலாம் என்று சொல்கிறாள்.

ஐஸ்வர்யாவின் திட்டம்: அதையடுத்து, நர்ஸ் சக்தி, தீபா குறித்து அனைத்து விஷயத்தைம் சொல்லுகிறாள். உடனே தீபா எதாவது பேசினாளா என்று கேட்க, அவங்க கார்த்திக் பேரைத்தவிர வேறு எதுவும் பேசவில்லை. இன்னும் மயக்கத்தில் தான் இருக்கிறார்கள் என்று சொன்னதும், ஐஸ்வர்யா நிம்மதி பெருமூச்சு விட்டுவிட்டு, வீட்டில் அனைவரும் தீபா காணாமல் போனதால் கவலையில் இருக்கிறார்கள். இதனால், இப்போது எதுவும் சொல்ல வேண்டாம். நான் கார்த்திக்கிடம் விஷயத்தை சொல்லி அழைத்து வருகிறேன் என்று சொல்லி நர்ஸ் சக்தியை அனுப்பிவைக்கிறாள்.

தீபா உன் கதை முடிந்தது: அதன் பிறகு மாஸ்டர் பிளான் போடும் ஐஸ்வர்யா, தீபா தான் கீதா என்று சொல்லி, துங்காவிடம் மாட்டிவிட்டாள். மீண்டும் வீட்டுக்கு தீபா திரும்பி வரவே மாட்டாள். நாமும் இந்த தீபா பிரச்சனையில் இருந்து தப்பிடடுவிடலாம் என மனதிற்குள் திட்டம் போட்டுக்கொண்டு, சக்தி வீட்டுக்கு கிளம்புகிறாள். மறுபக்கம், துங்காவும் சக்தியை தேடி இதே இடத்திற்கு கிளம்பி வருகிறான்.

ஐஸ்வர்யாதான் காரணமா: மற்றொரு பக்கம் கார்த்திக் மற்றும் இன்ஸ்பெக்டரும் அந்த பகுதியில் இருக்கும் மெடிக்கல் ஷாப்பில் நர்ஸ் சக்தி குறித்த விவரங்களை கேட்டு சக்தி வீட்டிற்கு வருகின்றனர். பிறகு ஆளாளுக்கு ஒரு பக்கம் சக்தி வீட்டை நெருங்க அங்கு வீட்டில் யாரும் இல்லாததை பார்த்து கார்த்திக் குழப்பம் அடைகின்றான். அந்த நேரம் பார்த்து ஐஸ்வர்யா அங்கு வர, அதை கார்த்திக் பார்த்து விடுகிறான். இந்த இடத்தில் ஐஸ்வர்யாவிற்கு என்ன வேலை, தீபாவின் இந்த நிலைமைக்கு காரணம் ஐஸ்வர்யா தான் என்பதை தெரிந்து கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X