கலக்கத்தில் ஐஸ்வர்யா.. தீபா நிலை என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், எப்எம் ஸ்டேஷனில் இருந்து கார்த்திக்கின் வீட்டு முகவரியை வாங்கிக்கொண்டு சக்தி வீட்டுக்கு வர, அங்கு இருக்கும் ஐஸ்வர்யா, கார்த்திக் இப்போது வீட்டில் இல்லை. நான் அவரின் அண்ணி தான் என்னை நம்பி விஷயத்தை சொல்லு என்று சொல்ல, நர்ஸ் சக்தி, அனைத்தையும் சொல்லி விடுகிறாள். இதையடுத்து ஐஸ்வர்யா நான் கார்த்திக்கிடம் விஷயத்தை சொல்லி அழைத்து வருகிறேன் என்று சொல்லி நர்ஸ் சக்தியை அனுப்பிவைக்கிறாள்.

மற்றொரு பக்கம் கார்த்திக் மற்றும் இன்ஸ்பெக்டரும் அந்த பகுதியில் இருக்கும் மெடிக்கல் ஷாப்பில் நர்ஸ் சக்தி குறித்த விவரங்களை கேட்டு சக்தி வீட்டிற்கு வருகின்றனர். ஆனால், அங்கு வீடு காலியாக இருக்கிறது. வீட்டில் யாரும் இல்லை. அந்த நேரம் பார்த்து ஐஸ்வர்யா, துங்காவுடன் வர, அதை கார்த்திக் பார்த்து விடுகிறான். இந்த இடத்தில் ஐஸ்வர்யாவிற்கு என்ன வேலை, தீபாவின் இந்த நிலைமைக்கு காரணம் ஐஸ்வர்யா தான் என்பதை தெரிந்து கொள்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், அதாவது, நர்ஸ் சக்தி ரவுடிகளிடம் இருந்து தீபாவை காப்பாற்றுவதற்காக அவளை அழைத்து கொண்டு ஒரு ஹோமுக்கு வருகிறாள். தீபாவை பார்த்ததும் அனைவரும், அந்த ஆசிரமத்தில் தீபா பாடி இருக்கிறாள் என்கின்றனர். பிறகு தீபாவுக்கு என்னாச்சு என்று விசாரிக்க நர்ஸ் சக்தி நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி தீபாவை அங்கே ஒப்படைக்கிறாள். மேலும், ஆசிரமத்தில் இருப்பவர்களிடம், தீபா பற்றி எதாவது தெரியுமா என கேட்க, அவர்கள் ஒரு கம்பேனி மூலமாகத்தான் தீபா, எங்க ஆசிரமத்திற்கு வந்தார் என்று சொல்ல, அந்த கம்பேனி முகவரியை வாங்கிக்கொண்டு சக்தி அங்கிருந்து கிளம்புகிறாள்.

பயத்தில் ஐஸ்வர்யா:மறுபக்கம், கார்த்திக் வீட்டிற்கு வர, ஆனந்த் வீட்டில் இருப்பது கீதாவா என்று கேட்க கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். மேலும் நான் துங்காவிடம் பேசவா என்று ஆனந்த் கேட்க, வேண்டாம் கீதா இப்போது பிரச்சனையில் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் துங்கா பெரிய ஆளு, பணபலம் கொண்டவன் அதான் இந்த விஷயத்தை அவனிடம் சொல்ல வேணாம் என்று சொல்கிறான். இப்படி இருவரும் பேசிக்கொண்டு இருக்க, ஐஸ்வர்யா வீட்டிற்கு வர, கார்த்திக் அவளை தடுத்து நிறுத்தி எங்க அண்ணி போயிட்டு வரீங்க என்று கேள்வி கேட்க ப்ரண்ட் வீட்டிற்கு சென்று வருவதாக சமாளிக்கிறாள். மேலும் கார்த்திக்கிற்கு சந்தேகம் வந்துடுச்சு எனவும் பயப்படுகிறாள்.

கடுமையான காய்ச்சல்: ஆசிரமத்தில் தீபா படுத்திருக்க மதர்ஸ் மற்றும் பார்வையற்ற குழந்தைகள் அவளை சுற்றி உட்கார்ந்து கொண்டு அவளுக்காக பிரார்த்தனை செய்கின்றனர். அப்போது திடீரென தீபாவுக்கு அளவுக்கு அதிகமாக காய்ச்சல் உண்டாக அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X