சுயநினைவை இழந்து தவிக்கும் தீபா.. கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோட்டில், அபிராமி கோவிலில் தீபா கழுத்தில் தாலி கட்ட சொல்ல. கார்த்திக் வேண்டாம் என்கிறான். நான் இப்படி சொல்கிறேன் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கும், தயவு செய்து இப்போ கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறான். அப்போதும், அபிராமி காரணம் என்ன என்று கேட்க, வேறுவழியே இல்லாமல், இது தீபா இல்ல, தீபா போலவே இருக்கும் கீதா என்று சொல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. மலையில் இருந்து விழுந்த தீபா காணும், அவ எங்கையோ இருக்கா, அவளை தேடிக்கொண்டு இருக்கிறேன் என்கிறான்.

மறுபக்கம் அதே கோவிலில் இருக்கும் நர்ஸிடம் ஆட்டோக்காரன் வந்து, மேடம் நீங்க சொன்னது போலவே, அந்த ரௌடி ஆட்டோவை வழிமறித்துக் கேட்டான் வழியில் இறக்கிவிட்டுவிட்டேன் என்று சொல்லி சமாளித்துவிட்டேன் என்கிறான். அப்போது நர்ஸ் சக்தி ரொம்ப நன்றி அண்ணா, வாங்க, ஆசிரமத்திற்கு போகலாம் என்று கிளம்பினார்கள். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோட், துங்காவிடமிருந்து தப்பித்து ஆசிரமத்திற்கு வந்து சக்தி, தீபாவை அழைத்துக்கொண்டு உள்ளே வருகிறாள். அப்போது அங்கிருந்தவர்கள் தீபாவிற்கு உடம்பு எப்படி இருக்கு என்று விசாரிக்க. அப்படியேத்தான் இருக்கிறார்கள். இவர்களை எப்படியாவது கார்த்திக்கிடம் ஒப்படைத்துவிட்டால் தான் எனக்கு நிம்மதி. ஆனால், தீபாவின் குடும்பத்திலேயே ஒரு எதிரி இருக்கா, நான் வீட்டுக்கு போனபோது, அந்த ஐஸ்வர்யாவிடம் தான் அட்ரசை கொடுத்தேன். அவள் தான் அதை துங்காவிடம் கொடுத்த வீட்டுக்கு அனுப்பிவிட்டாள்.

சுயநினைவை இழந்து தவிக்கும் தீபா: அதே கம்பெனிக்கு போனேன் அங்கேயும் ஐஸ்வர்யா இருக்கா, அவள் என்னை பார்த்துவிட்டு துங்காவிடம் சொல்லி, துங்கா எங்களை துரத்திக்கொண்டே வந்தான் என்று நடந்த விஷயத்தை அங்கு இருப்பவர்களிடம் நர்ஸ் சக்தி சொல்கிறாள். அது மட்டும் இன்றி தீபாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்க அவள் பாடிய பாடலையே எல்லோரும் சேர்ந்து பாடினால் தீபாவுக்கு உடல்நிலை சரியாக வாய்ப்பு உள்ளது என ஒன்று சேர்ந்து பாட முடிவெடுக்கின்றனர்.

கோவத்தில் குடும்பம்: கார்த்திக் வீட்டில், அனைவரும் இருக்க கோவத்தோடு பேசிய மீனாட்சி, இது எவ்வளவு பெரிய விஷயம் இதை எப்படி கார்த்திக் சொல்லாமல் மறைக்கலாம் என்று சொல்ல, அப்போது அபிராமி, எனக்கும் கோவம் வந்தது மீனாட்சி, ஆனால், அவன் குடும்பத்திற்காக என்று சொல்லும் போது, நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆனால், கார்த்திக் எது செய்தாலும் குடும்பத்திற்காகத்தான் செய்வான், இதனால், அவனைபற்றி யாரும் தவறாக பேசாதீர்கள் என்று சொல்ல அனைவரும் சென்றுவிடுகின்றனர்.

வருத்தத்தில் அபிராமி: இதையடுத்து, அபிராமி ரூமுக்கு வரும் கார்த்திக், ஏன் சாப்பிடவில்லை என்று கேட்க, அதுக்குள்ள மீனாட்சி இந்த விஷயத்தை சொல்லிவிட்டாளா, எனக்கு பசிக்கவில்லை கார்த்திக், தீபா எங்கே இருக்கா, எப்படி இருக்கா என்கிற கவலை மனசில் இருக்கும் போது எப்படி சாப்பிடுவது என்கிறாள். உடனே காரத்திக், நீங்க சாப்பிடாமல் இருந்தா தீபா கிடைத்துவிடுவாளா... முதலில் நீங்க சாப்பிடுங்க, என்னை நம்புங்க நிச்சயம் தீபா கிடைத்துவிடுவாள் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X