தீபாவை காப்பாற்ற கீதா எடுத்த விபரீத முடிவு.. கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோட்டில், துங்காவிடமிருந்து தப்பித்து ஆசிரமத்திற்கு வந்து சக்தி, தீபாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்க அவள் பாடிய பாடலையே எல்லோரும் சேர்ந்து பாடினால் தீபாவுக்கு உடல்நிலை சரியாக வாய்ப்பு உள்ளது என ஒன்று சேர்ந்து பாட முடிவெடுக்கின்றனர்.

அபிராமி தீபா எங்கே இருக்கா, எப்படி இருக்கா என்கிற கவலையில் வீட்டில் சாப்பிடாமல் இருக்கிறாள். அப்போது, அபிராமியை பார்க்க வரும் கார்த்திக், நீங்க சாப்பிடாமல் இருந்தா தீபா கிடைத்துவிடுவாளா... முதலில் நீங்க சாப்பிடுங்க, என்னை நம்புங்க நிச்சயம் தீபா கிடைத்துவிடுவாள் என்று சொல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், அடுத்ததாக அபிராமி தீபா நல்லபடியாக திரும்பி வரவேண்டும் என கோவிலுக்கு வந்து தீச்சட்டி எடுக்க கார்த்திக் உட்பட எல்லோரும் அது வேண்டாம் என தடுக்கின்றனர். அப்போது அபிராமி, என் மருமகளுக்காக இதை நான் செய்கிறேன். அவளுக்கு என்ன ஆச்சு, எப்படி இருக்கா என்று எதுவுமே தெரியவில்லை. அவள் நல்லபடியாக இந்த வீட்டுக்கு வர வேண்டும். அதற்காகத்தான் இந்த பரிகாரத்தை நான் செய்கிறேன். எனக்காக தீபா எவ்வளவு செய்திருக்கிறாள் அதுக்கு முன்னாடி இதெல்லாம் கம்மி என்கிறார்.

தீச்சட்டி பரிகாரம்: அம்மா, உங்களுக்கே உடம்பு சரியில்லை, இந்த நேரத்தில் இது தேவையில்லை, உங்களுக்கு பதிலாக நான் வேண்டுமானால் தீச்சட்டி எடுக்கிறேன் என்று கார்த்திக் சொல்கிறான். கார்த்திக், நீ எதுவும் சொல்ல வேண்டாம், நான் என் முடிவில் உறுதியாக இருக்கிறேன். யாரும் என் மனசை மாற்ற முயற்சி செய்ய வேண்டாம் என சொல்லிவிட்டு தீச்சட்டி எடுக்கிறாள் அபிராமி. இதைப்பார்த்த கீதா, ஆண்டி உண்மையில் நீங்க ரொம்ப கிரேட், எந்த மாமியாரும் தனது மருமகளுக்காக இப்படி செய்ய மாட்டாங்க. உங்க வேண்டுதல் நிச்சயம் வீண் போகாது ஆண்டி, நிச்சயம் தீபா கிடைத்துவிடுவார்கள், கவலைப்படாதீங்க என்று சொல்கிறாள். இதையடுத்து அனைவரும் கோவிலில் இருந்து வீட்டுக்கு வருகின்றனர்.

கீதா எடுத்த முடிவு: தீபாவுக்காக மொத்த குடும்பமும் காத்திருப்பதை பார்த்த கீதா நான் இந்த வீட்ல இருக்கிற வரைக்கும் தூங்கா நிச்சயம் தீபாவை விட மாட்டான். தீபா நல்லபடியாக இந்த வீட்டுக்கு திரும்ப வரணும்னா நான் துங்காவிடம் சரணடைவது தான் சரி. என்னால இந்த மொத்த குடும்படும் கஷ்டப்படுகிறது. இதற்கு ஒரே வழி துங்காவிடம் சரண் அடைய வேண்டும் என்று முடிவெடுக்கிறாள். இது குறித்து கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்டு ஒரு லெட்டர் எழுதுகிறாள். இந்த லெட்டரை ஐஸ்வர்யா பார்த்துவிட்டு மீனாட்சி போனில் இருந்து துங்காவிற்கு ஃபோன் போட்டு உன்னைய உடனடியாக பாக்கணும் என பேசுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X