கார்த்திக்கிற்கு உதவிய கடவுள்.. டபுள் ஆக்ஷனில் தீபா.. கதையே மாறி போச்சு.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவை தேடிக்கொண்டு இருக்க கார்த்திக்கின் நண்பன் போலீஸ் சரவணனிடம் இருந்து போன் வருகிறது. அதில், சரவணன் நான் அனுப்பும் லொகேஷனுக்கு உடனே வரும்படி சொல்ல கார்த்திக் அங்கு வருகிறான். அங்கு, ரியா குண்டு காயம் பட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

இதைத்தொடர்ந்து,போலீசார் ரம்யா மற்றும் தீபாவின் புடவை மட்டும் தான் கிடைத்தது. இங்கிருந்து விழுந்தால் பாடி எதுவும் கிடைக்காது, தீபா திரும்பி வருவது சந்தேகம் தான் என்று சொல்ல, கார்த்திக் ஷாக் அடைகிறான். இதனால் உடைந்து போன கார்த்திக், தீபா இந்த காட்டில் தான் எங்கோ இருக்கிறாள் என்று காட்டில் தீபாவை தேடி அலைகிறான். இதைத்தொடர்ந்து இங்கு என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக் மனமுடைந்து போய் ஒரு கோவிலுக்கு வந்து உட்கார்ந்து தீபாவை எப்படியாவது கண்ணுல காட்டு கடவுளே என வேண்டிக் கொண்டிருக்கிறான். இந்த சமயத்தில், இதே கோவிலுக்கு கடவுள் வேஷம் போட்டு ஒரு குடும்பத்தினர் வந்து உட்காருகின்றனர். முருகன் வேஷத்தில் இருந்த சின்ன பையன் கார்த்திக்கை பார்த்துவிட்டு, கார்த்திக்கிடம் வந்து ஏன் சோகமா இருக்க சாப்பிடலையா? பசிக்குதா? என்று கேட்க கார்த்திக் அதெல்லாம் இல்லை என்று சொல்கிறான்.

முருகன் உருவத்தில் சிறுவன்: அதன் பிறகு ஒரு பொருள் தொலைந்து போச்சு அதை கண்டுபிடித்து கொடுக்க சொல்லி கடவுளிடம் கேட்டு வந்திருக்கேன் என்று சொல்ல இந்த சின்ன பையன் உன் பேர் என்ன என்று கேட்க, எனக்கும் உன் பேரு தான் கார்த்திக் என்று சொல்ல நான் உன்னை கார்த்திக் என்று கூப்பிடட்டுமா என்று கேட்கிறான் அந்த சிறுவன்.

டபுள் ஆக்ஷனில் தீபா: மறுபக்கம், வேறுமாநில போலீஸ்கார் ஜீப்பை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டு போலீசிடம், பெண்ணை என்கவுட்டரில் போட்டு தள்ள போகிறோம் இந்த இடம் சரியாக இருக்குமா என்று கான்ஸ்டபிளை அனுப்பி கேட்டு வர சொல்கிறான். தமிழ்நாடு போலீசிடம் கேட்டுவிட்டு திரும்பி வரும் அந்த கான்ஸ்டபிள் இந்த மலை என்கவுன்டருக்கு சரியாக இருக்கும் என்று சொன்னதாக சொல்கிறான்.

என்கவுன்டரில் கொல்ல பிளான்: இதை ஜீப்பிற்குள் இருக்கும் கீதா என்ற அந்த பெண் கைதி கேட்டுவிட்டு, எப்படியும் என்னை கொல்லத்தானே போறீங்க பசிக்குது சாப்பாடு வாங்கித் தாங்க என்று கேட்கிறாள். போலீஸ் அதெல்லாம் வாங்கி தர முடியாது என்று சொல்கின்றனர். அதைக் கேட்டு தீபா போலவே இருக்கும் அந்தப் பெண் எப்படியும் சாக போகிறேன் நல்லாவே சாப்பிட்டு சாவுகிறேன் என்கிறார். நீங்க பேசுனதை நான் கேட்டுட்டேன். கடைசி ஆசையா சாப்பாடு தானே கேட்கிறேன் வாங்கி கொடுங்க என்று கேட்கிறாள். பிறகு போலீஸ் சரி வா என ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

அடுத்து நடப்பது என்ன: மறுபக்கம், அந்த கோவிலில், கார்த்திக் ரொம்ப நேரமாக அந்த சின்ன பையனிடம் பேசிக் கொண்டிருக்க, அந்த பையனை குடும்பத்தினர் விட்டுச் சென்று விடுகின்றனர். பிறகு அந்த பையன் எனக்கு கார்ல போகணும்னு ஆசை என்ன, என் வீட்ல விட்டுடுங்க என்று சொல்லி கேட்க கார்த்திக்கும் அழைத்துக் கொண்டு கிளம்புகிறான். அப்போது அந்த பையன் எனக்கு பசிக்குது என்று சொல்ல. கார்த்திக் அந்த சிறுவனை ஓட்டலுக்கு அழைத்து வருகிறான். அதே ஓட்டலில் தீபா போலவே இருக்கும் கீதாவையும் அதே ஹோட்டலுக்கு போலீசார் அழைத்துச் செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் காணத் தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X