போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய கீதா.. அதிர்ச்சியில் கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், தீபா காணாமல் போனநிலையில், தீபாவை போலவே இருக்கும் கீதா என்ற பெண்ணை, என்கவுட்டரில் போட்டு தள்ள போலீசார் திட்டம் போட்டுக்கொண்டு இருக்கின்றனர். இதை தெரிந்து கொண்ட அந்த பெண், கடைசி ஆசையா சாப்பாடு தானே கேட்கிறேன் வாங்கி கொடுங்க என்று கேட்கிறாள். பிறகு போலீஸ் சரி வா என ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

அந்த கோவிலில், கார்த்திக் ரொம்ப நேரமாக அந்த சின்ன பையனிடம் பேசிக் கொண்டிருக்க, அந்த பையனை குடும்பத்தினர் விட்டுச் சென்று விடுகின்றனர். பிறகு அந்த பையன் எனக்கு கார்ல போகணும்னு ஆசை என்ன, என் வீட்ல விட்டுடுங்க என்று சொல்லி கேட்க கார்த்திக்கும் அழைத்துக் கொண்டு கிளம்புகிறான். அப்போது அந்த பையன் தனக்கு பசிக்குது என்று சொல்ல. கார்த்திக் அந்த சிறுவனை ஓட்டலுக்கு அழைத்து வருகிறான். அதே ஓட்டலில் தீபா போலவே இருக்கும் கீதாவையும் அதே ஹோட்டலுக்கு போலீசார் அழைத்து வருகின்றனர். இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் ஓட்டலில் கார்த்திக், இந்த பெண்ணை பார்க்காமல் இருக்க முருகன் வேடத்திலிருக்கும் சிறுவன் இந்த பெண் கையில் விலங்குடன் சாப்பிடுவதை பார்த்து கார்த்திக்கிடம் சொல்கிறான். கார்த்திக் திரும்பிப் பார்க்கும் போது, இந்த பெண் முகம் தெரியாமல போய்விடுகிறது. பிறகு அதெல்லாம் நீ எதுக்கு பாக்குற ஏதாச்சும் தப்பு பண்ணி இருப்பாங்க என்று சொல்கிறான்.

கீதா: இங்கே தீபா வேடத்தில் இருக்கும் கீதா விதவிதமாக ஆர்டர் செய்து வெளுத்து கட்ட போலீஸ் என்னம்மா இப்படி சாப்பிடுற என்று கேட்க இன்னும் கொஞ்ச நேரத்துல என்னை கொல்ல போறீங்க எனக்கு புடிச்சது சாப்பிட்டுக்கிறேன் என்று சமாளிக்கிறாள். கண்டதை சாப்பிட்டு வாந்தி எடுத்து போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆகி விட வேண்டும் என்று கீதா திட்டம் போட்டு வைக்கிறாள்

தப்பித்த கீதா: பிறகு கார்த்திக் முருகன் வேடத்தில் இருக்கும் சிறுவனை வீட்டில் டிராப் செய்ய அவன் நீ தேடிய பொருள் சீக்கிரம் கிடைக்கும் என்று சொல்லி வீட்டிற்குள் செல்கிறான். இங்கே கீதா வாந்தி எடுத்து போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பித்து ஓடி வருகிறாள். அப்போது, கார்த்திக் கார் மீது வந்து மோதி கீழே விழ கார்த்திக் அவளை காப்பாற்ற, காரில் இருந்து கீழே இறங்கிவந்து பார்க்கிறான்.

அந்த பெண் தீபா உருவத்தில் இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறான். இது தீபாவாக இருக்க வாய்ப்பில்லை என்ற குழப்பத்தோடு அவளை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X