கீதாவால் படாதபாடுபடும் கார்த்திக்.. கார்த்திகை தீபம் வீகெண்ட் எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், தீபாவாக நடிக்க வரும் கீதாவிடம், நீங்க யாரு என்று விசாரிக்க கீதா கோபமாகி காரை நிறுத்த சொல்கிறாள். நான் தீபாவாக தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றால், என்னை பத்தி எந்த விஷயத்தையும் கேட்கக்கூடாது என்று கோவப்பட்டு கத்தி கண்டிஷன் போடுகிறாள். உடனே, கார்த்தி மன்னித்துவிடுங்கள் இனிமேல் நான் எந்த கேள்வியும் கேட்கமாட்டேன் என்று சொல்லி அவளை வீட்டுக்கு அழைத்து வருகிறான்,
வீட்டைப்பார்த்த கீதா, இதுதான் உங்க வீடா நல்லா இருக்கு என்கிறான், பிறகு கார்த்திக் எனக்கு ரொம்ப தலை வலியா இருக்கு, எனக்கு காபி குடிக்கணும் போல இருக்கு, எனக்கு காபி போட்டு கொண்டுவாங்க என்று சொல்ல, கார்த்திக் ஷாக்காகி வேறுவழியில்லாமல் காபி போட்டு கொண்டு வந்து கொடுக்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ஆனந்த் கார்த்திக்கு போன் செய்து அம்மாவை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வருவதாகவும் ஆரத்தி எடுக்க வேண்டும், அதற்கு ரெடி பண்ணி வை என்றும் சொல்ல கார்த்திக்கும் ஓகே சொல்கிறான். பிறகு கீதாவை ஆரத்தி எடுக்க சொல்லணுமே.. அவ என்ன சொல்லுவா என்று தெரியலை என பயப்படுகிறான். பிறகு கீதாவிடம் விஷயத்தை சொல்ல அவள் ஆரத்தினா என்னனு கேட்க கார்த்திக் சரியா போச்சு என்று கடுப்பாகிறான், பிறகு ஆரத்தி என்றால் என்ன என்று விளக்கி எப்படி எடுக்க வேண்டும் என்பதையும் செய்து காட்ட கீதா, நீ தான் நல்லா எடுக்கிறியே, நீயே எடுத்துடு என்று சொல்கிறாள்.
இதெல்லாம் பெண்கள் தான் எடுப்பாங்க, அது தான் சம்பிரதாயம் என்று சொல்ல கீதாவும் ஓகே சொல்கிறாள். பிறகு அபிராமி வீட்டிற்கு வர, கீதா ஆர்த்தி எடுத்துவிட்டு, ஹாய் ஆண்ட்டி என்று சொன்னதும் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைய, கார்த்திக் தீபாவுக்கு தலையில் அடிபட்டதால் இப்படி நடந்து கொள்வதாக சமாளிக்கிறான்.
மீண்டும் கல்யாணமா: பிறகு கீதா ஆரத்தி எடுத்து அதை ஐஸ்வர்யா முகத்தில் ஊற்றி விட ஐஸ்வர்யா நம்ம மீது இருக்கும் கோபத்தை, தான் இப்படி மறைமுகமாக காட்டுவதாக புரிந்து கொள்கிறாள். அதன் பிறகு அபிராமி பூஜையறையில் சாமி கும்பிட்டு விட்டு சீக்கிரம் கார்த்திக், தீபாவிற்கு கல்யாணம் செய்யணும் என்று சொல்ல கீதா இப்போ எதுக்கு அதெல்லாம் என்று கோபப்படுகிறாள்.
அதை தொடர்ந்து கார்த்திக் கீதாவை ரூமுக்குள் அழைத்து சென்று நான் சமாளித்து கொள்கிறேன், நீங்க டென்ஷன் ஆக வேண்டாம் என்று சொல்கிறான். தர்மலிங்கமும் ஜோதியும் தீபா என நினைத்து கீதாவிடம் பேச அவ உங்க வேலையை மட்டும் பாருங்க என்று கோபப்பட, இருவரும் தீபா இப்படி எல்லாம் பேச மாட்டாளே என்று குழப்பம் அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்


Click it and Unblock the Notifications











