மீண்டும் மீண்டுமா கல்யாணம்.. தாலி கட்ட சொன்ன அபிராமி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், ஆனந்த் கார்த்திக்கு போன் செய்து அம்மாவை டிஸ்ஜார்ஜ் செய்து அழைத்து வருவதாகவும் ஆரத்தி எடுக்க வேண்டும், அதற்கு ரெடி பண்ணிவை என்றும் சொல்கிறான். பிறகு கீதாவிடம் விஷயத்தை சொல்ல அவள் ஆரத்தினா என்ன என்று கேட்க, பிறகு ஆரத்தி என்றால் என்ன என்று விளக்கி எப்படி எடுக்க வேண்டும் என்று சொல்லி கொடுக்கிறான்.

பிறகு கீதா, ஆரத்தி எடுத்து அதை ஐஸ்வர்யா முகத்தில் ஊற்றி விட ஐஸ்வர்யா நம்ம மீது இருக்கும் கோபத்தை, தான் இப்படி மறைமுகமாக காட்டுவதாக புரிந்து கொள்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், அபிராமி பூஜையறையில் சாமி கும்பிட்டு விட்டு, நாளைக்கு கார்த்திக், தீபாவிற்கு வீட்டிலேயே கல்யாணம் செய்யணும் என்று சொல்ல, கீதா அதிர்ச்சி அடைந்து கார்த்திகை பார்க்கிறாள். கார்த்திக் அமைதியாக இருக்க, என்ன கார்த்திக் கல்யாணம் என்று சொல்கிறார்கள் நீ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க என்று கீதா மெதுவாக கொல்ல கார்த்திக் நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறான். இதைப்பார்த்த மீனாட்சி மற்றும் மைதிலி என்ன கார்த்திக் இன்னைக்கே கல்யாணம் பண்ண வேண்டும் என்று, தீபா சொல்லுறாளா என்று இருவரும் கிண்டலடிக்கின்றனர்.

பயப்படாதீங்க: இதையடத்து ரூமுக்குள் வரும் கீதா, கார்த்திக்கிடம் என்ன கார்த்திக் விட்ட உங்க வீட்ல எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சடுவாங்க போல இருக்கே, நீங்க எனக்கு உதவி செய்தீங்க பதிலுக்கு நான் உதவி செய்தேன் அவ்வளவு தான் என்று சொல்லிக்கொண்டு இருக்க, கார்த்திக் நீங்க பயப்படாதீங்க நான் பார்த்திக்கொள்கிறேன் என்று சொல்லி கீதாவை சமாதானப்படுத்த, நான் பார்த்துக்கொள்கிறேன் நீ கவலைப்படாதே என்று சொல்கிறான்.

கடுப்பான கீதா: இதையடுத்து, அபிராமி, தர்மலிங்கத்திடம் நாளைக்கு தீபாவிற்கு வீட்டிலே கல்யாணம் செய்துவிடலாம் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தர்மலிங்கம் நாளைக்கே கல்யாணம் செய்ய வேண்டுமா, அவ ஏதோ ஒரு மாதிரி இருக்கிறாள் அவளை கோவிலுக்கு அழைத்து போய்விட்டு வரலாம் என்று நினைக்கிறோம் என்று சொல்ல, நாளைக்கு கல்யாணம் ஆனபிறகு கோவிலுக்கு போகலாம் என்று சொல்லிவிட்டு அபிராமி சென்று விடுகிறாள்.

வருத்தப்படும் தர்மலிங்கம்: இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த கீதா, ஜானகி மற்றும் தர்மலிங்கத்திடம் வந்து, நீங்க யாரு, எதுக்கு என்ன பத்தி தப்பு தப்பா பேசுறீங்க என்று சொல்ல, தர்மலிங்கம், நாங்க உங்க அம்மா, அப்பா என்று சொல்ல, சரி இருக்கட்டும் அதற்காக இங்கேயே இருப்பீங்களா... பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்துவிட்டால் போக வேண்டியது தானே என்று சொல்ல தர்மலிங்கம் வருத்தப்பட்டு அங்கிருந்து கிளப்பி சென்றுவிடுகிறார்.

அடுத்து கார்த்திக் மற்றும் கீதா ரூமுக்குள் பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது கீதா வீட்டில் இருப்பவர்கள் பற்றி கேட்கிறான். அனைவர் பற்றியும் சொல்லி கார்த்திக், ஐஸ்வர்யாவிடம் மட்டும் பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்று சொல்ல,எனக்கும் அவர்கள் மீது ஏதோ சந்தேகம் இருக்கு நான் அது என்ன என்று கட்டுபிடிக்கிறேன் என்று தீபா சொல்கிறாள். இவர்கள் பேசுவதை ஐஸ்வர்யா ஒட்டு கேட்டு கொண்டு இருக்கிறாள். பிறகு ஐஸ்வர்யா, அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி கொண்டிருக்க அருண் ரூமுக்குள் வந்து விடுகிறாள். மொத்தத்தையும் பேசி முடித்த ஐஸ்வர்யா பக்கத்தில் அருண் உட்கார்ந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி, அடைந்து ஐயோ.. நான் தெரியாமல் பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க என்று கத்தா, அருண் காதில் இருந்த ஹெட் போனை எடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X