திடீரென வீட்டுக்கு வந்த போலீஸ்.. கீதா சிக்குவாளா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், கார்த்திக்கிடம் கீதா வீட்டில் இருப்பவர்கள் பற்றி கேட்க, அனைவர் பற்றியும் சொல்லும் கார்த்திக், ஐஸ்வர்யாவிடம் மட்டும் பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறான். எனக்கும் அவர்கள் மீது ஏதோ சந்தேகம் இருக்கு, அது என்ன என்று கண்டுபிடிக்கிறேன் என்று கீதா சொல்கிறாள்.

இதைத்தொடர்ந்து, ஐஸ்வர்யா, அம்மாவுக்கு போன் செய்து, அம்மா நான் தான் தீபாவை மலையில் இருந்து தள்ளிவிட்டேன். ஆனால், இவ சாகாமல் மீண்டும் வந்து இருக்கா என்று விஷயத்தை சொல்லி கொண்டிருக்க அருண் ரூமுக்குள் வந்து விடுகிறான். ஐஸ்வர்யா மொத்தத்தையும் பேசி முடித்துவிட்டு திரும்ப, அருண் உட்கார்ந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி, அடைந்து ஐயோ.. நான் தெரியாமல் பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க என்று கத்த, அருண் காதில் இருந்த ஹெட் போனை எடுக்கிறான். இதைத்தொடர்ந்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், அதாவது ஐஸ்வர்யா சோபாவில் உட்கார்ந்து கொண்டிருக்க அவள் எதிரே கீதா கத்தியுடன் நிற்க அதை பார்த்து ஐஸ்வர்யா ஷாக் ஆகிறாள். உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க உன்னுடைய உயிர் தான் வேண்டும் என்று சொல்லி அவளை கத்தியால் குத்த ஐஸ்வர்யா அலறி அடித்துக்கொண்டு எழுந்திருக்கிறாள். அப்போது அருண், ஐஸ்வர்யா என்ன ஆச்சு நீ ஏதோ தப்பு பண்ணி இருக்க அதான் இப்படி என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சமாளித்துவிடுகிறாள்.

பயந்து போன ஐஸ்வர்யா: இதைத்தொடர்ந்து, ஐஸ்வர்யா தண்ணீர் குடிக்க கிச்சனுக்கு எழுந்து வர அங்கே கீதா கத்தியுடன் நின்று கொண்டிருக்க அதை பார்த்த ஐஸ்வர்யாவும் கத்தி எடுத்து நிற்க இருவரும் ஒருவரை ஒருவரை பார்த்து முறைத்தபடி இருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து அபிராமி தண்ணீர் குடிக்க கிச்சனுக்கு வர இருவரும் கத்தியுடன் நிற்பதை பார்த்து ஷாக் ஆகி இருவரிடமும் என்ன என்று கேட்க, கீதா பசித்தது ஆப்பிள் சாப்பிட வந்தேன் என்று சொல்ல, ஐஸ்வர்யாவும் ஏதோ சொல்லிவிட்டு சென்று விடுகிறாள்.

கீதாவிடம் விசாரிக்கும் போலீஸ்: மறுநாள் கார்த்திக்கின் நண்பன் போலீஸ் சரவணன், வீட்டுக்கு வருகிறான். அப்போது, சரவணன், இவ்வளவு பெரிய மலையில் இருந்து விழுந்தும் தீபா உயிர் பிழைத்தது பெரிய விஷயம் என்று சொல்ல, உடனே கார்த்திக் நான் கும்பிட்ட கடவுள் என்னை கைவிடவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்க அங்கே கீதா வர, சரவணன், அன்று என்ன நடந்துச்சு என விசாரிக்க அவள் தலையில் அடிபட்டதால் எனக்கு என்ன நடந்துச்சு என்று தெரியவில்லை என சமாளிக்கிறாள். பிறகு சரவணன் பாதுகாப்பாக இருங்கள், நாளைக்கு ஸ்டேஷனுக்கு வந்து ஒரு லெட்டர் எழுதி கொடுங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

கீதா சிக்குவாளா: மறுபக்கம், சரவணன் ஸ்டேஷனுக்கு கீதாவை என்கவுண்டரில் போட்டுத் தள்ள பிளான் போட்டிருந்த போலீஸ் ரிப்போர்ட் ஒன்றை கொண்டு வந்து கொடுக்கிறார். கீதா என்ற பெண் எங்களிடம் இருந்து தப்பி சென்றுவிட்டாள், இந்த ஏரியாலத்தான் தப்பி ஓடினாள், நீங்க அவங்களை பிடிக்க உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல, சரவணன் கண்டிப்பாக செய்கிறேன் என்று சொல்கிறான். அந்த போலீஸ் ரிப்போர்ட்டில் கீதாவின் போட்டோ இருக்கிறது. அதை சரவணன் பார்க்கவில்லை

வரமாட்டேன்: இதைத்தொடர்ந்து, கீதா ரூமுக்குள் இருக்க கார்த்திக் உள்ளே வர எதுக்கு போலீஸ் வீட்டுக்கு வந்து விசாரணைக்கு கூப்பிடுறாங்க என்று கோபப்படுகிறாள். அதற்கு கார்த்திக், சரவணன் என்னுடைய பிரண்டு தான் இது வெறும் ஃபார்மாலிட்டி தான் வாங்க போயிட்டு வந்துடலாம் என்று சொல்லி கூப்பிடுகிறான். ஆனால், கீதா நான் வரமாட்டேன் என்று கோவப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X