Zee TV: யப்பா.. கூஸ்பம்ஸா இருக்கே.. பக்தி சுற்றில் மிரட்டி எடுத்த மகாநடிகைகள்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய், சந்தியா ராகம் என பலத் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவாக அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது மகாநடிகை. சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் சாமானிய பெண்கள், தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் போட்டியாக, இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் வாரந்தோறும் ஞாயிற்று கிழமை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி மகாநடிகை. 10 போட்டியாளர்களுடன் புதுமுக நடிகைக்கான தேடலாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே விஜய் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட விஜய் ஆண்டனி, தேசிய விருது பெற்ற நடிகை சரிதா மற்றும் விருமாண்டி அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

zee tamil mahanadigai promo

ஆக்ஷன் ரவுண்ட்: இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமாக ரவுண்ட் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், கடந்த வாரம் ஆக்ஷன் ரவுண்ட் நடைபெற்றது. தமிழ் சின்னத்திரை வரலாற்றில் முதல் முறையாக ரியாலிட்டி ஷோவில் பெண் போட்டியாளர்கள் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டலான நடிப்பை கொடுத்து பிரம்மிக்க வைத்தனர்.

zee tamil mahanadigai promo

பக்தி சுற்றி: இதனை தொடர்ந்து இந்த வாரம் பக்தி சுற்று ஒளிபரப்பாக உள்ளது. புராண கதைகளை தேர்வு செய்து மாறுபட்ட வேடத்தில் பக்தி காவியங்களை நம் கண் முன் கொண்டு வர உள்ளனர். இது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்து வருகிறது. வெளியாகியுள்ள ப்ரோமோவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பெர்பாமன்ஸ்க்கும் நடுவர்கள் எழுந்து நின்று கை தட்டி பாராட்டும் வகையில் போட்டியாளர்கள் நடிப்பில் தூள் கிளப்பியுள்ளனர். எனவே மகாநடிகை நிகழ்ச்சியின் பக்தி சுற்றை இன்று இரவு 8:30 மணிக்கு உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

zee tamil mahanadigai promo

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X