மனோகரி கையில் சிக்கிய தாலி.. சுடர் சிக்கினாளா? தப்பினாளா? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், வீட்டில் கரெண்ட் இல்லாததால் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து இருக்க, முதலில் அஞ்சலி பாட்டு பாடத் தொடங்க, அவள் அம்மா இந்து பாடிய பாடலை பாடுவதை பார்த்து எல்லோரும் ஷாக் ஆகி திகைத்து நிற்கின்றனர். இதைப் பார்த்த சுடர் இப்படியே விட்டால் இந்துமதியின் ஞாபகம் அதிகமாக வந்து எல்லாரும் பீல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க என்று அவள் பாட ஆரம்பிக்கிறாள்.
கரண்ட் இல்லாத நேரம் பார்த்து மனோகரி சுடரைப்பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள அவளது ரூமுக்கு செல்கிறாள். அனைத்து பொருட்களையும் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்க, அவள் கையில் ஒரு சுருக்கு பை கிடைக்கிறது. அது என்ன என்று பார்ப்பதற்குள் கரண்ட் வந்துவிட, பதற்றத்தில் மனோகரி அப்படியே போட்டுவிட்டு சென்று விடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்: நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில், கரண்ட் வந்து விட அனைவரும் ரூமுக்கு செல்ல, சுடர் தனது அறையில் அனைத்து பொருட்களும் கலைந்து கிடப்பதை பார்த்து, யார் இப்படி செய்து இருப்பார் என்று யோசிக்கிறாள். இந்த வீட்டில் யாருக்கோ நம் மீது டவுட் இருக்கு என்பதை புரிந்து கொள்கிறாள். இதையடுத்து சுடர் மீண்டும் எழில் குடிபோதையில் பாடிய பாடலை பாட எழில் அவளை முறைக்க ரூமுக்கு வந்து விடுகிறாள். எழிலும் ரூமுக்கு சென்று நடந்ததை நினைத்து பார்த்து சிரிக்கிறான்.
சிக்கப்போகும் கவின்: இதனையடுத்து மறுநாள் காலையில் குழந்தைகள் எல்லாரும் ஸ்கூலுக்கு கிளம்ப கவின் மட்டும் ரெடியாகாமல் இருக்கிறான். மனோகரி ஸ்கூல் போகலையா என்று கேட்க நீங்க சொன்னதால் ரேங்க் ஷீட்டில் அப்பா கையெழுத்தை நானே போட்டுட்டேன். இன்னைக்கு பேரன்ட்ஸ் மீட்டிங். அப்பா வந்தா நான் மாட்டிக்குவேன் என்று பயப்பட மனோகரி சரி அப்பாவோட சேர்ந்து நானும் வரேன் என்று சொல்கிறாள். கவின் எழில் கையெழுத்து போட்டதை பெரிய பிரச்சனையாக்கி குழந்தைகளை ஹாஸ்டலில் சேர்த்து விட வேண்டும் என்று கணக்கு போடுகிறாள்.

எழிலை முறைக்கும் மனோகரி: அதற்கேற்றார் போல எழிலிடம் பேசி சம்மதிக்க வைத்து அவனை ஸ்கூலுக்கு அழைத்து கொண்டு கிளம்ப தடுத்து நிறுத்தும் கனகவல்லி சுடரை கூட்டிட்டு போங்க, குழந்தைகளோட கேர் டேக்கர் அவ தானே, குழந்தைகளை பற்றி அவளுக்கு தான் தெரியணும் என்று சொல்ல மூவரும் காரில் கிளம்புகின்றனர். காருக்குள் சுடரும் மனோகரியும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்து கொள்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











