இந்துவின் போனை பார்த்து கலங்கிய எழில்.. வேலுவால் வந்த சிக்கல்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், அஞ்சலி டீச்சர் பார்க்க வேண்டும் என்று சொல்லி, எழில் டீச்சரை பார்க்க செல்கிறார். அப்போது, உங்க வைப் இல்லையா என்று கேட்க எழில் அவங்க இல்ல, இப்போ நான் சிங்கிள் என்று சொல்ல ஏன் சார் இவ்வளவு ஹாண்ட்ஸமாக இருந்திட்டு சிங்கிள்னு சொல்றீங்க என்று பேச டீச்சர் பேசுவதை புரிந்து கொண்ட எழில் அங்கிருந்து எஸ்கேப் ஆக முயற்சி செய்கிறார். பிறகு போன் அபி, காவியா, கவின் டீச்சரை பார்க்க போகும் அங்கும் வரும் அஞ்சலி டீச்சர் எழிலிடம் போன் நம்பர் கேட்க அவர் ஒரு போன் கால் வந்திருப்பதாக சொல்லி எஸ்கேப் ஆகிறார்.
இறுதியாக கவின் டீச்சர் ரேங்க் கார்டை எடுத்து நீட்ட எழில் வேண்டாம் எவ்வளவு மார்க் எடுத்து இருப்பான்னு தெரியும் என்று சொல்லி விடுகிறார், டீச்சர் அவனோட பெர்பாமன்ஸ் சரியில்ல என்று சொல்ல சுடர் அடுத்த எக்ஸாம்க்குள்ள நான் அவனை மாத்துறேன் என்று சவால் விடுகிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

எழில் மீது மோதிய சுடர்: இதையடுத்து இன்றைய எபிசோடில் அஞ்சலி டீச்சர் எழிலிடம் வந்து உங்க போன் நம்பர் கிடைக்குமா? நீங்க ஏன் இரண்டாவது திருமணம் செய்ய கூடாது என்றெல்லாம் கேட்க எழில் அங்கிருந்து எஸ்கேப் ஆகி ஓடி ஒளிகிறார். மறுபக்கம் சுடர் அருகே வந்து நிற்கும் சதாசிவம் அவளை கீழே விழ வைத்து அவள் மீது தண்ணீரை ஊற்றி விடுகிறார். அவருக்கு பயந்து ஓடி வரும் சுடர் எழில் மீது மோதி நீங்க என்ன சார் இங்க மறைந்திட்டு இருக்கீங்க என்று கேட்க அந்த பொண்ணு டார்ச்சர் பண்ணுது என்று சொல்கிறார், எழில் இதே கேள்வியை திருப்பி கேட்க சுடர் அந்த சதாசிவத்தை ஒரு நாள் அடிச்சிட்டேன், அவன் தான் தண்ணீர் ஊற்றி விட்டார் என்று சொல்கிறார். பிறகு இருவரும் அங்கிருந்து கிளம்பி வருகின்றனர்.
வருத்தப்பட்ட எழில்: காரில் வரும் போது எழில் நீ தான் பசங்கள மாத்தின என்று பெருமையாக பேசி வர சுடர் ஒரு இடத்தில காரை நிறுத்த சொல்லி இறங்கி போய் ரிப்பேருக்கு கொடுத்திருந்த இந்துவின் போனை வாங்கி வந்து கொடுக்கிறார். இதை பார்த்த எழில் எமோஷன் ஆகிறார், பிறகு சுடர் வீட்டிற்கு வர கனகவல்லி பசங்களுக்கு துணி எடுக்கணும், இதை வாங்கணும் அதை வாங்கணும் என்று லிஸ்ட் போட்டு கொண்டிருக்கிறாள்.
சுடரை தேடிவரும் எழில்: இதை பார்த்த சுடர் எதுக்கு இந்த லிஸ்ட் என்று கேட்க எப்போதும் இந்துவின் பிறந்த நாளை ஆசிரமத்தில் கொண்டாடுவது தான் வழக்கம், அவ போன பிறகு சரியாவே கொண்டாட முடியல என்று சொல்கிறாள். அவங்களுக்கு சமைக்க தான் லிஸ்ட் என்று சொல்கிறாள். சுடர் என் கையால் சமைக்கறேன் என்று சொல்ல கனகவல்லியும் ஓகே சொல்கிறார். அடுத்து வேலு, சுடர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வீட்டிற்குள் நுழைந்து தேடுகிறார். இப்படியான நிலையில் அது நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











