வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட மனோகரி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், இந்துவின் பிறந்த நாளை வழக்கமாக ஆசிரமத்தில் தான் கொண்டாடுவோம், அவ போன பிறகு சரியாவே கொண்டாட முடியல என்று சொல்லி வருத்தப்படுகிறாள் கனகவல்லி. இதனால், இந்துவின் பிறந்த நாளை ஆசிரமத்தில் கொண்டாட இருப்பதாக கூறி, அவர்களுக்கு சமைக்க தான் லிஸ்ட் என்று சொல்கிறாள்.
இதையடுத்து, சுடர் என் கையால் சமைக்கறேன் என்று சொல்ல கனகவல்லியும் ஓகே சொல்கிறாள். அடுத்து வேலு, சுடர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வீட்டிற்குள் நுழைந்து தேடுகிறான். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கிறான்.

கடுப்பான மனோகரி : இதையடுத்து இன்றைய எபிசோடில், ஆசிரமத்திற்கு சாப்பாடு கொடுக்க எழில் கிளம்ப கனகவல்லி மனோகரியிடம் நாங்க எல்லாரும் வெளியே போறோம், நீ குழந்தைகளை பார்த்துக்கோமா என்று சொல்ல மனோகரி கேர் டேக்கரை விட நான் நல்லாவே பார்த்துப்பேன் என்று சொல்ல கனகவல்லி அப்படினா, சுடர் நீ எழிலோட ஆசிரமத்திற்கு போய்ட்டு வா என்று சொல்ல மனோகரி கடுப்பாகிறாள்.
குழந்தைகளிடம் சிக்கிய மனோகரி: எழில் ஆசிரமத்திற்கு தனியா போறான், நீயும் கூட போனா நல்லா இருக்கும், அதுமட்டுமில்லாமல், சுடரே அவ கையால் சமைத்து இருக்கா, அவ கையால் பரிமாறினால் அவளுக்கு சந்தோசமாக இருக்கும் என்று சொல்ல எழிலும் சுடரை அழைத்து கொண்டு கிளம்புகிறான். இதையடுத்து கனகவல்லி,குழந்தைகளை மனோகரியிடம் விட்டு கோவிலுக்கு செல்கிறாள். குழந்தைகள் அனைவரும் மனோகரியை அது வேண்டும், இது வேண்டும் என கேட்டு டார்ச்சர் செய்கின்றனர்.
அடுத்து நடக்கப்போவது என்ன: இதையடுத்து, எழிலுடன் காரில் வரும் சுடர், தொடர்ந்து பேசி கொண்டே இருக்க எழில் கொஞ்சம் பேசாமல் அமைதியா வா என்று திட்டுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











