எழில் இந்துவின் காதல் டிராக்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில் இந்துவின் பிறந்த நாளுக்கு எழில் ஆசிரமத்திற்கு உணவு கொடுக்க செல்கிறார். அப்போது கனகவல்லி, எழில், தனியா போறான், நீயும் கூட போனா நல்லா இருக்கும், அதுமட்டுமில்லாமல், சுடரே அவ கையால் சமைத்து இருக்கா, அவ கையாலே பரிமாறினால் அவளுக்கு சந்தோசமாக இருக்கும் என்று சொல்ல எழிலும் சுடரை அழைத்து கொண்டு கிளம்புகிறான்.
இதையடுத்து கனகவல்லி, குழந்தைகளை மனோகரியிடம் விட்டு கோவிலுக்கு செல்கிறாள். குழந்தைகள் அனைவரும் மனோகரியை அது வேண்டும், இது வேண்டும் என கேட்டு டார்ச்சர் செய்கின்றனர். எழிலுடன் காரில் வரும் சுடர், தொடர்ந்து பேசி கொண்டே இருக்க எழில் கொஞ்சம் பேசாமல் அமைதியா வா என்று திட்டுகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய் சீரியல்: இதையடுத்து இன்றைய எபிசோடில், எழில் மற்றும் சுடர் என இருவரும் ஆசிரமத்திற்கு வர பிள்ளைகள் அனைவரும் ஓடிவந்து எழிலை கட்டிப்பிடித்து வரவேற்கின்றனர். பிறகு எழிலுக்கு இந்து உடனான ஞாபகங்கள் வந்து போக அவன், அவளை நினைத்து வருத்தப்படுகிறான். பிறகு பிள்ளைகள் அனைவரும் சாப்பிட கூப்பிட எழில் வெறும் வெஜிடபிள்ஸ் தான் போடுவாரு. அதுக்கு நம்ம ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிடலாம் என்று சொல்கின்றனர்.
மருத்துவ பரிசோதனை: சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க என்று பிள்ளைகளை உட்கார வைக்கிறாள் சுடர் சாப்பாட்டை பரிமாற எல்லோரும் ருசித்து சாப்பிடுகின்றனர். அடுத்ததாக எழில் பிள்ளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டிருக்க ஆசிரமத்தில் இருக்கும் சிஸ்டர் எழில் இந்து பற்றி சுடரிடம் பேசுகிறார்.
எழிலின் காதல் கதை: சுடர் அவங்களுடைய காதல் எப்படி ஆரம்பித்தது என்று கேட்க பிளாஷ் கட் ஓப்பன் ஆகிறது. எழில் இந்துவை உயிருக்கு உயிராக நேசித்தது தெரிய வருகிறது. பணக்காரங்க பாதியிலேயே விட்டு போயிடுவாங்க ஆனால் எழில் அப்படி இல்லை என்று சொல்கிறார். ஃபிளாஷ் கட்டில் எழில் இந்துவிடம் நாளைக்கு ரெடியா இரு என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











