எழிலின் மகத்துவத்தை உணரும் சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், எழில் மற்றும் சுடர் என இருவரும் ஆசிரமத்திற்கு வந்து, தனது கைகளால் சமைத்த உணவை பரிமாறி சுடர் மகிழ்ச்சி அடைகிறாள். இதையடுத்து, எழில் பிள்ளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டிருக்க ஆசிரமத்தில் இருக்கும் சிஸ்டர், இப்படி ஒரு நல்ல மனிதரை நான் பார்த்ததே இல்லை என்று சொல்ல, நீங்க நான் நல்லவருனு சொல்லனும், இவருடைய பசங்க இவரை ஹிட்லர் போல பார்க்கிறார்கள் என்று சொல்கிறாள்.

அப்போது அந்த சிஸ்டர், என்னுடைய இத்தனை வருஷ அனுபவத்தில் இவரைப் போல ஒருத்தரை நான் பார்த்தது இல்ல, இன்னைக்கு என்ன நாள் தெரியுமா, இந்துவும் எழிலம் சந்தித்துக்கொண்ட நாள், இந்த ஆசிரமத்தில் தான் இருவரும் முதல் முதலாக சந்தித்துக்கொண்டார்கள் என்று இருவரும் காதல் கதை குறித்து சிஸ்டர் சொல்கிறார். பிளாஷ் பேக் செல்கிறது இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil television Ninaithen Vandhai serial April 17th today episode

நினைத்தேன் வந்தாய்: இதையடுத்து இன்றைய எபிசோடில், இந்துவை முதன் முதலில் ஆசிரமத்தில் பார்த்த எழில் அவள் மீது காதலில் விழுந்து விடுகிறான். இதையடுத்து, மறுநாள் காலையில் ரெடியா இரு என்று சொல்லி விட்டு வீட்டிற்கு சென்று தன்னுடைய குடும்பத்தை ஆசிரமத்திற்கு அழைத்து வந்து அனைவருக்கும் இந்துவை அறிமுகம் செய்து வைத்து சர்ப்ரைஸ் கொடுக்கிறான். அது மட்டுமில்லாமல். இந்துவை தான் கல்யாணம் செய்து கொள்ள போவதாக சொல்லி குடும்பத்தாரிடம் அனுமதி வாங்கி விடுகிறான்.

எழிலின் காதல் கதை: எழிலின் இந்த செயலைப்பார்த்த இந்துவிற்கும் எழில் மீது காதல் வந்து, இந்துவும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறாள். இதனையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என சிஸ்டர் எழில் இந்து காதல் கதை பற்றி சொல்லி முடிக்கிறார். இதை எல்லாம் கேட்ட சுடருக்கு எழில் மீது ஒரு சாப்ட் கார்னர் உருவாகிறது.

மனம் மாறும் சுடர்: இத்தனை நாளா இவரை, கோவக்காரர், ஹிட்லர் என்று தான் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால், இவருக்குள் இப்படி ஒரு காதல் கதை இருக்கா என்றும், மனைவி இந்துவை மறக்க முடியாமல் தான் இவர் தன்னைத்தானே மாற்றிக்கொண்டு அனைவரிடமும் கோபமாக நடந்து கொள்கிறார் என்பதை புரிந்து கொள்கிறாள். மேலும், இந்து எழில் காதலை நினைத்து ஆச்சரியப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X